பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/662

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


634 பதினெண் புராணங்கள் “விஷ்ணுவே! எல்லாச் செயல்களையும் செய்கின்றவர் நீரே ஆவீர். தலைமையிடத்திலிருந்து அதைப் பார்க்கும் பொறுப்பு மட்டும் என்னுடையது. எல்லாவற்றிலும் நம் இருவரிடையேயும் எவ்விதமான வேற்றுமையும் இல்லை என்பது தெளிவான, நிரூபிக்கப்பட்ட ஒன்றாகும். நீரே சந்திரன், நான் சூரியன், நீரே இரவு, நான் பகல் வெளிக்குத் தெரியாத பிரகிருதி ஆவீர் நீர். நான் புருஷனாக உள்ளேன். நீரே அறிவு. நானே அதை அறிபவன். நீரே மாயையாக உள்ளீர். நானே ஈஸ்வரனாக உள்ளேன். அறிவின் மூலம் கிடைக்கின்ற சக்தி ஆவீர் நீர். அந்தச் சக்தியின் நாயகன் ஆவேன் நான். குற்றமற்ற பிரபுவாக உள்ளேன் நான். நீரும் நாராயண சொரூபத்தில் அதே நிலையில் உள்ளிர். பிரம்ம சொரூபத்தை அறிய முற்படும் யோகிகள் வேற்றுமையில் ஒற்றுமை காண்கின்றனர். இப்பிரபஞ்சத்தின் ஆத்மாவாக உள்ள விஷ்ணுவே, உம்மை அடையாமல் யாரும் என்னிடம் வர முடியாது. தேவர்கள், அசுரர்கள், மானிடர்கள், உயிர் வர்க்கங்கள் ஆகிய அனைத்தையும் நீர் காப்பீராக’ என்று கூறினார். இவ்வாறு கூறியபின் பிறப்பு, இறப்பு கடந்ததும், தோற்றம், முடிவு இல்லாததும், பொறிபுலன் காண வெளிப்பட்டு நில்லாததும் ஆகிய ஒரு நிலையில் சங்கரன் கலந்துவிட்டார். ருத்ரன் பிரம்மன் தன் ஆசனமாகிய தாமரை மலரில் சென்று அமர்ந்து கொண்டார். திடீரென்று மது, கைடபன் என்ற இரு அசுரர்கள் தோன்றினர். அவர்கள் மிகவும் பலம் பொருந்திய வர்களாக இருந்தனர். பிரம்மன் சிருஷ்டிக்கும் அனைத்தையும் அழித்து விடுவதாக பயமுறுத்தினர். உடனே, பிரம்மன் விஷ்ணுவின் உதவியை நாடினார். விஷ்ணு தன் உடலில் இருந்து இருவரைத் தோற்றுவித்து, மது கைடபர்களைக்