பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/666

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

638 பதினெண் புராணங்கள் கூறப்பட்டுள்ளது. அவனுக்குப் பின்பு அவன் சகோதரனாகிய ஹிரண்யாக்ஷன் அசுரர்களின் தலைவனாக இருந்தான். விஷ்ணு வராக அவதாரம் எடுத்துப் பாதாள உலகில் சென்று, பூமியை மறைத்து வைத்திருந்த ஹிரண்யாrனைக் கொன்று. பூமியை மீட்டார். அவனுக்குப் பிறகு பிரகலாதன் ஆட்சிப் பொறுப்பேற்றான். சிறந்த விஷ்ணு பக்தனாகிய அவன் சிறந்த முறையில் ஆட்சி செய்தான். வேறு பணியில் பிரகலாதன் ஈடுபட்டிருந்த பொழுது, வந்திருந்த பெரியவரை கவனக் குறைவாய் சரியாக உபசரிக்காமல் இருந்து விட்டான். அந்தப் பெரியவர் மிகவும் கோபம் கொண்டு, "விஷ்ணுவைப் பற்றி நீ மறந்து விடுவாய். அதனால் நீ விஷ்ணுவுடன் போரிட்டுத் தோல்வி அடைவாய்” என்று கூறினார். அப்பெரியவரின் சாபப்படி பிரகலாதன் நேர்மையான வழியை மறந்து, பெரியோர்களை மதிக்க மறந்தான். ஆகையால் வேதம், சாத்திரங்கள் ஆகியவற்றை மறந்து, விஷ்ணு தன் தந்தையைக் கொன்றதால் பழிவாங்க நினைத்தான். நீண்ட காலம் விஷ்ணுவுடன் போர் புரிந்து முடிவில் தோல்வியுற்றான். தன் தவற்றினை உணர்ந்து விஷ்ணுவிடம் மன்னிப்புக் கேட்டான். கெளதம முனிவர் பற்றியது முன்னொரு காலத்தில் உலகில் எங்கும் கடும் பஞ்சம் நிலவியது. பல ஆண்டுகளாக மழையே இல்லாததால் யாருக்கும் உணவு கிடைக்கவில்லை. காட்டில் உள்ள முனிவர் களுக்கும் உணவு கிடைக்கவில்லை. அந்த நிலையில், காட்டில் மற்றொரு பகுதியில் கெளதம முனிவர் என்பவர் வாழ்ந்து வந்தார். மிகப் பெரிய ஆன்மீக பலம் பொருந்திய அவர் ஆசிரமத்தைச் சுற்றி மழை பொழிந்து வந்தது. அங்கு உணவிற்குப் பஞ்சமே இல்லை. பஞ்சத்தில் அடிபட்ட முனிவர் அனைவரும் இறுதியாக கெளதம முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றனர். அவர்களை வரவேற்ற கெளதமர் அவர்களுக்கு