பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/668

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


640 பதினெண் புராணங்கள் தவறான வாழ்க்கை வாழத் தொடங்கியதால் அவர்கள் நரகம் செல்வது எளிதாயிற்று. கெளதமரின் சாபமும் பலித்தது. இதனை அடுத்து அந்தகன் கதையும், வவிச்சக்கரவர்த்தி கதையும் பேசப்படுகிறது. இக்கதைகள் முன்னரே பல புராணங் களில் கூறப்பட்டுள்ளதால் அவற்றை இங்கே கொடுக்க வில்லை, G¥6ÛIT வலிச்சக்கரவர்த்திக்கு நூறு பிள்ளைகள் இருந்தனர். அவர்களுள் மூத்தவனான இவன் சிவபக்தன். மிகுந்த வலிமை படைத்தவனாகிய வனா இந்திரனை வெற்றி கொண்டு, மூவுலகையும் ஆண்டு வந்தான். இந்திரனும், மற்ற தேவர்களும் சென்று சிவனிடம் முறையிட்டனர். சிவனை நோக்கி, ‘ஐயனே! உம்முடைய பக்தனாகிய வனா எங்களுக்கு மிகுந்த சிரமத்தைத் தருகிறான். ஆகவே அவனிடமிருந்து எங்களைக் காக்க வேண்டும் என்று கூற, சிவனும் சம்மதித்தார். சிவபெருமான் ஒரே ஒரு அம்பினை எய்து, வனாவின் நகரம் முழுவதையும் எரித்தார். தன்னுடைய நகர் முழுவதும் எரிந்ததைக் கண்ட வனா சிவலிங்கத்தை வழிபட ஆரம்பித்தான். அவனுடைய அன்பினை மெச்சிய சிவபெருமான் தன்னுடைய கணங்களுக்குத் தலைவனாக ஆக்கினார். சூரிய வம்சாவளி காசியப முனிவருக்கும், அதிதிக்கும் மகனாகத் தோன்றியவன் வைவஸ்வனா. இவனுக்கு நான்கு மனைவியர். இவர்களில் சம்ஜனா முதல் மனைவி ஆவார். அவருடைய மகனே வைவஸ்வத மனு ஆவான். அவனுக்கு ஒன்பது பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் இக்ஷவாகு நபகா, அரிஷ்டா