பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/669

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கூர்ம புராணம் 641 முதலானோர். இலா என்று ஒரு மகள் இருந்தாள். அவள் வழியிலேயே சந்திரவம்சம் தொடங்கிற்று. இrவாகு பரம்பரையில் தோன்றியவனே தசரதன். அவன் மகன் இராமன் போன்றோர். சந்திர வம்சாவளி சந்திரனின் மகனாகிய புதன், வைவஸ்வத மனுவின் மகளாகிய இலாவை மணந்தான். அவர்களுக்குப் புரூரவா என்ற மகன் இருந்தான். அவன் அப்ஸரஸ் ஊர்வசியை மணந்து அனுமன்களைப் பெற்றனர். இந்தப் பரம்பரையில் வந்தவனே யயாதி மன்னன். யயாதி மன்னனின் மகனாகிய யாதுவின் வழியில் வந்தவனே கார்த்தவீரிய அருச்சுனன். அவனுக்குப் பலநூறு மக்கள் இருந்தனர். அவர்களில் ஐவர், மிக முக்கியமானவர்கள். அவர்கள் முறையே சுரா, சுரசேனா, கிருஷ்ணா, திருஷ்ணா, ஜயத்வஜா என்றழைக்கப்பட்டனர். இவர்களில் ஜயத்துவஜா விஷ்ணுவை தியானிப்பார். மற்ற நால்வரும் சிவனையே வணங்குபவர்கள். ஒரு நாள் சகோதரர்களுக்குள் ஒரு வாக்குவாதம் மூண்டது. மூத்த சகோதரர்கள் நால்வரும் ஒன்றுகூடி, இளையவனைப் பார்த்து நீ விஷ்ணுவை வணங்குவது சரியன்று. நம் தந்தை பெரிய சிவபக்தர். அப்படி இருக்க அவருடைய பிள்ளை களாகிய நாம் அவர் வழியில் செல்வதுதான் முறை. தந்தை யைப் போலவே நீயும் சிவபக்தனாக மாறிவிடு என்று கூறினர். அதற்கு விடையாக, ஜயத்துவஜன் “விஷ்ணுதான் எல்லோருக்கும் பெரியவர். அவர்தான் இவ்வுலகைக் காப்பவர். எனவே அவரைத் தொழுவதுதான் சரி” என்றான். இவர்களுக்குள் ஒருமைப்பாடின்மையால் சகோதரர்கள் ஒன்று கூடி சப்தரிஷிகளுள் ஒருவராகிய வசிட்டரிடம் சென்றனர். அவரிடம் தத்தம் வாதங்களை முன்வைத்தனர். அதைக் கேட்ட шлц.-41