பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/670

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

642 பதினெண் புராணங்கள் வசிட்டர் பின்வருமாறு கூறினார்: "அவரவர் விருப்பத்திற்கு எந்த தெய்வம் உகந்ததோ அதை வழிபடுவதே சரியானதாகும். மேலும் அரசர்கள் விஷ்ணுவையும், இந்திரனையும், பிராம ணர்கள் அக்னி, சூரியன், பிரம்மன், சிவன் ஆகியோரையும், தேவர்கள் விஷ்ணுவையும், அசுரர்கள் சிவனையும், யட்சர்கள் கந்தர்வர்கள் சந்திரனையும், முனிவர்கள் பிரம்மன், சிவன் ஆகியோரையும், பெண்கள் பார்வதியையும் வணங்குகின்றனர். மனிதர்கள் விஷ்ணுவும் சிவனும் வேறு வேறு அல்ல என்பதை உணர்ந்து, இருவரையும் ஒரே சமயத்தில் வணங்க வேண்டும்” என்று கூறி முடித்தார் வசிட்டர். முன்னொரு காலத்தில் துர்ஜயா என்ற மன்னன் உலகை ஆண்டு வந்தான். அவனுடைய மனைவி மிக்க அழகு வாய்ந்தவள். நல்ல குணநலன்கள் பொருந்தியவள். ஒரு நாள் துர்ஜயா அரசன் காளிந்தி நதிக்கரைக்குச் சென்றான். அங்கு அப்ஸ்ரஸ் ஊர்வசியைக் கண்டு மணம் புரிந்து கொண்டு நீண்ட காலம் அங்கேயே தங்கிவிட்டான். பலகாலம் கழித்து தன் ராஜ்ஜியத்தையும், மனைவியையும் நினைத்துக்கொண்டு தன் நாட்டிற்குச் சென்று வர வேண்டும் என்ற தன் விருப்பத்தை ஊர்வசியிடம் தெரிவித்தான். அவள் 'இன்னும் ஒர் ஆண்டு இருந்துவிட்டுப் போகலாம் என்று கூறினாள். அவன் பிடிவாதம் செய்யவே “அவன் நாட்டிற்குச் சென்று மனைவியைப் பார்த்தாலும் அவளுடன் வாழக் கூடாது. பார்த்துவிட்டு உடனே திரும்பிவிட வேண்டும்” என்று அவனிடம் வாக்குறுதி வாங்கிக் கொண்டு அவனை அனுப்பினாள். தன் நாட்டிற்கு வந்த அவன் மனைவியைப் பார்த்தும்கூட அவளுடன் பேசாமல் இருந்துவிட்டான். அவன் மனைவி மெளனத்தின் காரணத்தை வற்புறுத்திக் கேட்டபோது