பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/675

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூர்ம புராணம் 647 படுகின்ற பிற பொருட்களுக்கும் இடையே எந்த வேற்றுமை யையும் காண்பதில்லை. ஒரே பரமாத்மா சர, அசர எல்லாப் பொருள்களிலும் ஊடுருவி நிற்கின்றது. ஆறுகளெல்லாம் கடலில் சென்று கலப்பதுபோல, உலகத்தில் உள்ள உயிர்களெல்லாம் இறுதியில் பரமாத்மாவைச் சென்று அடைகின்றன. யோகம் என்பது தியானத்தின் ஒரு பகுதியாகும். இந்தப் பயிற்சியின் மூலம் இந்த ஜீவாத்ம-பரமாத்ம ஒருமைப் பாட்டைத் தெளிவாக அறிய முடியும். யோகம் என்பது எட்டு வகைப்படும். முதலாவது பிராணாயாமம். பிராணாயாமம் என்றால் மூச்சைக் கட்டுப்படுத்துதல் என்பது பொருளாகும். ரேசகம் என்பது மூச்சை வெளியே விடுவதாகும். பூரகம் என்பது மூச்சை உள்ளே இழுத்தல் ஆகும். கும்பகம் என்பது இவை இரண்டும் இல்லாமல் இருப்பதாகும். இரண்டாவது படி பிரத்யாகாரம் எனப்படும். இது பொறிபுலன்களை அடக்குவதாகும். யோகத்தைப் பயிலும் போது உட்கார வேண்டிய முறை அறிந்து உட்கார வேண்டும். சரியான ஆசனம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். நான்காவது படி இயமம் எனப்படும். அஹிம்சை, சத்தியம், இரக்கம் என்பவற்றைக் கடைப்பிடிப்பதாகும். நியமம் என்பது ஐந்தாவது படி. கடவுளை பக்தியோடு வழிபடுதல், வேதம் முதலிய வற்றைக் கற்றல், அகப்புறத் தூய்மையோடு இருத்தல், தியானம் ஆகியவையாம். தியானம் என்பது பரப்பிரம்மத்தை ஏதாவது ஒரு வழியுடன் மனத்தில் இருத்தி அதனையே நினைப்பதாகும். இது ஆறாவது படியாகும். தாரணா என்பது கற்பித்துக் கொண்ட தெய்வவடிவை மனத்தில் ஆழமாகப் பதித்துக் கொள்வதாகும். இது ஏழாவது படி சமாதி என்ற எட்டாவது நிலை, பரமாத்மனையும், ஜீவாத்மனையும் ஐக்கியப்படுத்திக் கொள்வதாகும்.