பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/677

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


கூர்ம புராணம் 649 பிரம்மம். தேவருலகில் உள்ளவர்களையும் நானே இயக்கு கிறேன். அனைத்தையும் படைக்கின்ற என்னைவிட உயர்ந்த வர்கள் யாருமில்லை. எல்லா தேவதைகளும், தெய்வங்களும் என் இச்சைப்படியே பணிபுரிகின்றனர்!" என்று கூறி முடித்தான். - பிரம்மன் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கையில், நாராயணனின் ஒரு கூறு விஷ்ணு என்ற பெயரில் பிரம்மம் முன்வந்து பேச ஆரம்பித்தது. வந்த விஷ்ணு சொரூபம், "ஓ பிரம்மனே! நீ என்ன பேசிக் கொண்டிருக்கிறாய். மூன்று கண்களை உடைய பிரபு உன்மேல் மிகவும் வெறுப்புற்று இருக்கிறார். நீ பெரிய அறியாமை என்ற இருளில் மூழ்கி இருக்கிறாய். அந்த இருளில் உன்னை மூழ்கடித்தது உன் அகம்பாவமே ஆகும். நான்தான் அண்டபிண்ட சராசரம் அனைத்தையும் காக்கின்றவன். என்னுடைய ஆணையின் மேல்தான் நீ இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்துக் கொண் டிருக்கிறாய்.” இவர்கள் இருவரும் இவ்வாறு சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, நான்கு வேதங்களும் அங்கு வந்தன. வந்த நான்கு வேதங்களும் பிரம்மாவையும், யக்ஞ ஸ்வரூபி விஷ்ணுவையும் பார்த்து, மூலப் பரம்பொருளின் தன்மை என்ன என்பதை விளக்க ஆரம்பித்தன. ரிக்வேதம் பேசியதாவது - பிரபு மகேஸ்வரனிடம் இருந்துதான் அனைத்தும் தோன்று கின்றன. அவர் விருப்பத்தினாலேயே பிரபஞ்சம் நிலைத் திருக்கிறது. யஜூர்வேதம் கூறியது பினாகபாணியாகிய ஈஸ்வரனைத்தான் சகலரும் வணங்குகின்றனர்.