பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/680

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

652 பதினெண் புராணங்கள் விஷ்ணுவிடம் பிச்சை ஏற்பதற்காகச் சென்றார். விஷ்ணு தன்னைத் தீயிலிருந்து இரத்தம் கபாலத்தில் விழுமாறு செய்தும் கபாலம் விழவில்லை. பிராமணனாகிய பிரம்மனைக் கொன்றதால், பிரம்மஹத்தி தோஷம் குரூரமான பெண் வடிவுடன் காலபைரவரைப் பின்தொடர்ந்தது. எங்கு சென்றும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இறுதியாகக் காலபைரவர் வாரணாசிக்குள் நுழைந்தார். அந்த எல்லையிலேயே பிரம்மஹத்தி அவரை விட்டுப் பிரிந்து விட்டது. நகருக்குள் சென்றதும் கையில் இருந்த கபாலமும், காலபைரவர் கையை விட்டுக் கீழே விழுந்து விட்டது. பிரம்ம கபாலம் கையை விட்டு நீங்கிய இடம் ஆதலால், வாரணாசிக்குக் கபாலமோசன தீர்த்தம் என்ற பெயர் வந்தது. சீதையின் அக்னிப் பிரவேசக் கதை (பிரசித்தி பெற்ற வால்மீகி இராமாயணத்தின் மிக முக்கியமான பகுதி சீதையை இராவணன் களவாடிச் சென்றதாகும். வால்மீகிப்படி, இராமனின் மனைவியும், ஜனகன் புத்ளியும், தசரதனின் மருமகளும் ஆகிய சீதையைத் தான் இராவணன் களவாடிச் சென்றான். ஆனால் இந்த முக்கியமான கட்டத்தில் கூர்மபுராணம் சிவ மாற்றங்களைச் செய்து ஒரு புதிய திருப்பத்தைத் தருகிறது. ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த துளசிதாசர், வால்மீகி உள்பட எல்லாருடைய இராமாயணங்களும் ஒரே மாதிரியாகச் சொல்வி சீதை சிறையெடுக்கப்பட்ட கதையினை ச7/7 சீதை என்று முதன் முதலில் பாடுகிறவர் துளசிதாசரே ஆவார். இந்த மாற்றத்தைத் துளசிதாசர்தாமே செய்யவில்லை அதிகம் பயிலப்படாத கூர்மபுராணத்தில் இருந்துதான் இக் கதையை எடுத்துக் கொண்டார் என்பதை தன்கறி முடியும்,