பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/682

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

654 பதினெண் புராணங்கள் கொண்டு வர முடியாது. அந்த இக்கட்டையும் போக்குகின்ற முறையில், இராமன் உத்தரவினால் மாயா சீதை நெருப்பில் விழுந்து மறைந்து விட, உண்மையான சீதையை அக்னி தேவன் வெளியே கொண்டு வருகிறான். 哥 நந்தி முன்னொரு காலத்தில் ஷிலதா என்ற முனிவர் சிவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்தார். ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்த பிறகு சிவன் எதிரே வந்தார். பார்வதியுடன் வந்த சிவன், உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, 'தாயின் வயிற்றில் பிறக்காதவனும், தங்களைப் போன்றவனும், மரணத்தின் பிடியில் அகப்படாதவனும் ஆகிய ஒரு மகன் எனக்கு வேண்டும் என்று கேட்க சிவன் அப்படியே ஆகட்டும் என்று கூறி மறைந்தார். அதன் பிறகு விலதா முனிவர் பூமியை உழுகையில் சூரியப்பிரகாசத்தை உடைய ஒரு குழந்தை காணப்பட்டான். அந்தக் குழந்தையைக் கட்டி மகிழ்ந்தார். குழந்தை வளர வளர ஒரு பிராமணச் சிறுவனுக்குரிய பூணுால் அணிதல் முதலிய சடங்குகளை முறையாகச் செய்வித்தார். பிறகு வேதம் கற்பித்தார். எல்லாவற்றையும் எளிதாகக் கற்றுக் கொண்ட குழந்தை தான் தவம் செய்யப் போவதாகக் கூறிவிட்டுக் கடற்கரைக்குச் சென்று சிவனை தியானித்து ஒரு கோடி ருத்ரஜபம் செய்தான். ஜபம் முடிந்ததும் சிவன் எதிரில் தோன்றி, "உனக்கு வேண்டும் வரத்தைக் கேள்' என்றார். இளைஞன் இன்னும் ஒரு கோடி ருத்ரஜெபம் செய்ய அருள் செய்ய வேண்டும் என்று கேட்க, மகேசனும் ஒப்புக் கொண்டார். இதுபோல மூன்றாவது கோடியை முடித்த பொழுது, சிவன் தோன்றினார். 'மறுபடியும் ஒரு கோடி ஜபம் செய்ய வேண்டும் என்று கேட்க, சிவன் அது தேவையில்லை. இப்பொழுதே உன்னை எல்லாக் கணங்களுக்கும் தலைவனாக