பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/684

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


656 பதினெண் புராணங்கள் தன் ஏழு கிரணங்களாலும் கடலைக் குடிக்க முற்படுகிறான். கடல்நீர் முழுவதையும் குடித்த பிறகு அக்கிரணங்கள் பூமியை எரிக்கத் தொடங்குகின்றன. பூமியின் மேல், கீழ், நடு ஆகிய பகுதிகளில் பாயும் சூரிய கிரகணங்கள் பூமியை முழுவதும் சூழ்ந்து கொள்வதால் பூமியே நெருப்புப் பந்தாக ஆகிவிடுகிறது. இந்தப் பெரு நெருப்பு நான்கு உலகங்களையும் எரித்துச் சாம்பலாக்குகிறது. ஸ்தாவர, சங்கம உயிரினங்கள் அனைத்தும் அழிந்த நிலையில் பூமியே ஒரு ஆமையின் முதுகு போல் தோன்றுகிறது. -