பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/686

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

658 பதினெண் புராணங்கள் முன்னொரு காலத்தில் நைமிசாரண்ய வனத்தில் முனிவர்கள் பலரும் கூடி ஒரு யாகம் நடத்தினர். யாகம் முடிந்தபின் லோமஹர்ஷனரைப் பார்த்து இதுவரை பல புராணங்களை எங்களுக்குக் கூறினர்கள். மேலும் கேட்க வேண்டும் என்ற ஆசையால் உங்களை நாடுகிறோம் என்று கூறினார்கள். லோமஹர்ஷனர், "புராணங்களில் எல்லாம் மிகப் பழைமையானதும், புண்ணியம் வாய்ந்ததும் ஆன மச்ச புராணத்தை இப்பொழுது உங்களுக்குச் சொல்லப் போகிறேன். மிக்க கவனத்துடன் அதைக் கேட்பீர்களாக" என்ற முன்னுரையுடன் லோமஹர்ஷனர் சொல்ல ஆரம்பித்தார். விஷ்ணுவும், மனுவும் முன்னொரு காலத்தில் மனு என்ற மன்னன் இப்பூமியை ஆட்சி செய்து வந்தான். இவன் முதல் மனு என்று மச்ச புராணம் கூறினாலும், அதே நேரத்தில் இவன் சூரியன் மைந்தன் என்றும் கூறுகிறது (மற்றப் புராணங்களின்படி சூரியன் மைந்தனாகிய மனு ஆவான், உரிய காலத்தில் மனு வேந்தன் அரசைத் தன் மகனிடம் ஒப்புவித்து விட்டுக் காட்டிற்குத் தவம் செய்யச் சென்றான். ஆயிரம் வருடங்கள் தவம் செய்த பிறகு பிரம்மா அவன் எதிரே தோன்றினார். 'உனக்கு என்ன வரம் வேண்டும்’ என்று பிரம்மா கேட்க, மனு பின்வருமாறு பதில் கூறினான். "பிரம்மனே! என் விருப்பத்தையெல்லாம் ஒரே ஒரு வரத்தில் கேட்டு விடுகின்றேன். அண்மைக் காலத்திலோ அல்லது பலகாலம் கழித்தோ பிரளயம் வந்து இவ்வுலகத்தை அழிக்கப் போகிறது. அந்த அழிவுக் காலத்தில் நான் மட்டும் இருந்து இந்த உலகத்தையும் எல்லா உயிர்களையும் காக்கும் பணியைச்