பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/687

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மச்ச புராணம் 659 செய்ய வேண்டுகிறேன்” என்றான். அதுகேட்ட பிரம்மன், "அப்படியே ஆகட்டும் என்று கூறி மறைந்தான். சிலகாலம் சென்றபிறகு ஒரு நாள், தவசியாகிய மனு பக்கத்தில் உள்ள குளத்தில் நீராடச் சென்றான். குளித்த பிறகு, பிதுர்க்கடன் செய்வதற்காக இரண்டு கைகளையும் குவித்து அதில் நீரை முகந்தான். கைக்குள் இருந்த நீரில் மிகச்சிறிய மீன் குஞ்சு இங்கும் அங்கும் நீந்திச் சென்றது. அதை விட்டுவிட மனமில்லாத மனு அதைத் தன் கமண்டலத்துள் போட்டான். மறுநாள் கமண்டலத்தை விடப் பெரிதாகிவிட்ட அந்த மீன், 'மனுவே இந்தக் கமண்டலம் சிறிதாக இருக்கிறது. பெரிய இடத்தில் என்னை விடவும் என்று கூற, மன்னன் அதை ஒரு தொட்டியில் விட்டான். ஒரே நாளில் தொட்டி முழுவதையும் அடைத்துக் கொண்டது அந்த மீன். மறுபடி குளத்தில் விட, குளத்தைவிடப் பெரிதாக மீன் வளர அதை கங்கையில் விட, கங்கையை அடைத்துக் கொண்டு பெரிதாக வளர, இறுதியில் மீனை சமுத்திரத்தில் விட்டான். கடல் சிறிதாகும்படி மீன் வளர்ந்து கடலையே அடைத்துக் கொண்டது. இது கண்டு அதிசயித்த மனு மன்னன் அந்த மீனைப் பார்த்து, 'நீ யார் என்பதை அறிய விரும்புகிறேன். மாயா சக்தியால் என்னை ஏமாற்றுகின்ற நீ அசுரனா? இல்லை, இருக்க முடியாது. நீ விஷ்ணுவாகத்தான் இருக்க முடியும். அறிந்துகொள்ள வேண்டும் என்ற என் ஆவலைப் பூர்த்தி செய்ய வேண்டு கிறேன்.” உடனே விஷ்ணு பேச ஆரம்பித்தார். “மனுவே! நீ நினைத்தது சரிதான். விஷ்ணுவாகிய நான்தான் இந்தப் பெரிய மீன் வடிவம் கொண்டுள்ளேன். இன்னும் சிறிது காலத்தில் மாபெரும் வெள்ளம் வந்து பூமியை மூடப்போகிறது. அந்த வெள்ளத்தில் உன்னிடம் ஒரு படகு வந்து சேரும். அந்தப் படகு தேவர்களால் செய்யப் பெற்றது. அப்படகில் எல்லா ஜீவராசிகளையும் ஏற்றிக்