பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/689

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மச்ச புராணம் 661 ஆண்டுகள் முட்டைக்குள் இருந்த பிரம்மன் இறுதியில் அதை இரண்டாகப் பிரித்துக் கொண்டு வெளியே வரலானார். அவர் இருந்த பாதிபோக எதிர்ப்பாதி கருவடிவிலிருந்த பிரபஞ்சத் திற்கு முழு வடிவு கொடுத்தார். இந்தத் தோற்றத்திலேயே சூரியனும் தோற்றுவிக்கப்பட்டான். ஆதியில் தோன்றியவன் ஆதலால், ஆதித்யன் என்ற பெயரும் பெற்றான். மிக நீண்ட காலம் பிரம்மன் தவத்தில் ஈடுபட்டார். தவத்தில் இருக்கும் பொழுதுதான் அவர் வாயிலிருந்து வேதம், புராணங்கள், சாத்திரங்கள் வெளிப்பட்டன. பிரம்மனுடைய மனத்திலிருந்து மானசீக புத்திரர்களாகப் பத்துப்பேர் தோன்றினர். அவர்களே முதல் பத்து முனிவர்கள் ஆவர். மரீச்சி, அத்ரி, புலஸ்தியா, புலஹ ஆகிய பதின்மர் ஆவர். ஆனால் பிரபஞ்சம் வளர வேண்டுமானால் தாயும், தந்தையும் தேவை. எனவே பிரம்மன் தன் உடம்பில் இருந்தே ஸ்வயம்பு மனு என்ற ஆணையும், ஷத்த ருபா என்ற பெண்ணையும் உற்பத்தி செய்தார். இந்த ஷத்த ரூபாவை சாவித்திரி, காயத்ரி, சரஸ்வதி, பிராமணி என்ற பெயர்களாலும் குறிப்பிடுவர். ஷத்த ரூபா, பிரம்மனிடத்தில் தோன்றியதாலும், எல்லை யற்ற அழகுடையவளாய் இருந்ததாலும் பத்து முனிவர்களும் அவளைத் தங்கை என்றே கூறினர். ஆனால் அவள் அழகில் ஈடுபட்ட பிரம்மன் அவளை மணந்து கொள்ள விரும்பினார். இந்த நிலையில் ஷத்த ரூபா மிக்க மரியாதையுடன் பிரம்மனைச் சுற்றி வரலானாள். அவள் தன் பார்வையிலிருந்து விலகிச் சென்று வலப்புறம், பின்புறம், இடப்புறம் ஆகிய பகுதிகளில் சுற்றி வரும்பொழுது அவளைப் பார்க்க முடியவில்லையே என்று வருந்திய பிரம்மன், நான்கு முகங்களைப் படைத்துக் கொண்டார். அவள் மேலே சென்றால் அங்கேயும் விடாமல் பார்க்க, ஐந்தாவது முகத்தையும் படைத்துக் கொண்டார். இதனால்தான் பிரம்மனுக்கு ஐந்து முகம் தோன்றியது.