பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/690

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

662 பதினெண் புராணங்கள் ஷத்த ரூபாவை மணந்து கொண்ட பிரம்மன், நூறாண்டுகள் கணவனும், மனைவியுமாக வாழ்ந்து சுவயம்பு மனுவைப் பெற்றனர். மச்சபுராணம் வைவஸ்வத மனு வுக்கு மச்சத்தால் சொல்லப்பட்டது என்பதை நினைவுகூர வேண்டும். இப்பொழுது வைவஸ்த மனு ஒரு வினாவை எழுப்பினான். "ஒ விஷ்ணுவே! இது எனக்கு ஓரளவு ஆச்சரியத்தை உண்டாக்குகிறது. ஷத்த ரூபா என்பவள் பிரம்மனின் மகள்தானே! அப்படியிருக்க அவளையே மணந்து கொண்டது சரியா? என்று கேட்க விஷ்ணு “சரியில்லைதான். ஆனால் பிரபஞ்சத்தில் மக்கள் தொகை பெருக வேண்டுமே. அதற்காகத்தான் பிரம்மன் இக்காரியம் செய்தார். தெய்வங்கள் செய்யும் செயலை மனிதர்களின் ஆராய்ச்சிக்கு உட்படுத்துவது சரியாகாது” என்று விஷ்ணு பதிலளித்தார். இதன் பிறகு பிரம்மன் மனோ சக்தியால் சனகர் முதலிய நால்வரையும், சிவனையும் படைத்தார். சிவனை அழைத்துத் தன் படைப்புத் தொழிலில் உதவுமாறு கேட்டுக் கொண்டார். சிவன் தன்னைப் போலவே சாவாமூவா மக்களைப் படைக்க பிரம்மன் சிவனைப் பார்த்து, இப்படியே படைத்தால் யமனுக்கு வேலை இல்லாமல் போய்விடும். எனவே பிறந்து இறந்து மறுபடியும் பிறக்கின்ற மக்களைப் படைக்க வேண்டும் என்று கூறினார். தாம் அவ்வாறு செய்ய முடியாது என்று சிவன் கூறியவுடன், தாங்கள் படைப்புத் தொழில் செய்ய வேண்டா. நானே அதனைப் பார்த்துக் கொள்கிறேன்’ என்று பிரம்மா கூறிவிட்டார். உடனே ஸ்வயம்புமனு பன்னெடுங்காலம் தவம் செய்து அதன் பயனாய் ஆனந்தி என்ற பெண்ணை உண்டாக்கி அவளை மணந்து கொண்டார். இவர்கள் இருவரும், பிரியவரதா, உத்தானபாதா என்ற இரு மகன் களைப் பெற்றனர். உத்தானபாதன் பரம்பரையில் வந்த பிராச்சீனவர்ஹி, கடலரசன் மகள் சாவர்ணாவை மணந்து