பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/691

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மச்ச புராணம் 663 கொண்டான். அவர்களுக்குத் தோன்றிய பத்துப் பிள்ளைகளே பிரசேதர்கள் எனப்பட்டனர். இந்தப் பதின்மரும் மரீஷா என்ற பெண்ணையே மணந்தனர். பிரசேதாவுக்கும், மரீஷாவிற்கும் தோன்றிய மகன் தட்சன் ஆவான். தட்சன் பரம்பரை தட்சன் பஞ்சஜனி என்பவளை மணந்து ஆயிரம் பிள்ளைகளைப் பெற்றான். அவர்கள் வளர்ந்து இளமைப் பருவம் எய்தியவுடன் நாரதர் அங்கு வந்து சேர்ந்தார். அவர்களைப் பார்த்து 'உங்கள் தந்தைக்குப் பிறகு அரசாள வேண்டியவர்கள் அல்லவா நீங்கள்? உலகம் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளாமல் எப்படி செம்மையாக ஆட்சி செய்ய முடியும்? ஆகவே உலகம் முழுவதையும் சுற்றிப் பார்த்து வாருங்கள் என்று அனுப்பினார். யாத்திரை சென்ற ஆயிரம் பேரும் திரும்பி வரவே இல்லை. இதனை அறிந்த தட்சன் மனம் வருந்தி, மறுபடியும் ஒர் ஆயிரம் பிள்ளைகளைப் பெற்றான். இவர்களும் வளர்ந்து பருவம் அடைந்தவுடன், நாரதன் அதே வேலையைச் செய்ய இவர்களும் உலகைச் சுற்றி வருகிறேன் என்று சொல்லி காணாமல் போய்விட்டனர். இதனை அடுத்து தட்சன் அறுபது பெண்களைப் பெற்று பத்துப்பேரை தர்ம தேவதைக்கும், இருபத்தி ஏழு பேரை சந்திரனுக்கும், பதின்மூன்று பேரை காசிப முனிவருக்கும், எஞ்சியுள்ளவர்களை மற்ற முனிவர்களுக்கும் திருமணம் செய்து கொடுத்தான். காசியபனை மணந்த பதின்மூவருள் அதிதியும், திதியும் முக்கியமானவர்கள். அதிதி வயிற்றில் பிறந்த அனைவரும் ஆதித்தர் எனப்படும் தேவர்கள் ஆவர். திதி வயிற்றில் பிறந்தவர்கள் தைத்தியர்கள் ஆவர். காசிபனின் மனைவியருள்