பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/692

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

664 பதினெண் புராணங்கள் ஒருத்தியான தனு மூலம் நூறு தானவர்கள் தோன்றினர். இவர்களில் விப்ரசித்தி முக்கியமானவன் ஆவான். இப்பகுதியில் காணப்படும் மருத்துக்களின் கதை முன்னரே செ7ல்வப்பட்டுள்ளது, பிரம்மனுடைய ஒரு நாள் ஒரு கல்பம் எனப்படும். அவருடைய ஒரு நாளில் இந்த உலகைப் பொருத்தவரையில் பதினான்கு மன்வந்திரங்கள் வந்து போகின்றன. ஒவ்வொரு கல்பத்தின் முடிவிலும், இப்பூமி இல்லாமல், அண்டம் முழுவதும் அழிக்கப்படுகிறது. அழிக்கப்பட்ட பிறகு புதிய உற்பத்தி தொடங்குகிறது. இப்பொழுது நடைபெறுகின்றது ஏழாவது மன்வந்திரம் ஆகும். ஆறு மன்வந்திரங்கள் முன்னரே வந்து போய்விட்டன. இந்த அண்டம் மறுபடியும் அழிவை எய்துவதற்கு இப் பொழுது நடைபெறுகின்ற மன்வந்திரம் போக இன்னும் ஏழு மன்வந்திரங்கள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு மன்வந்திரத்திலும் தெய்வங்களும், சப்த ரிஷிகளும், இந்திரர் களாக மாறுகின்றனர். 1. முதல் மன்வந்திரம் சுவயம்பு மனு-தேவர்கள்; யமன்கள். 2. இரண்டாவது ஸ்வரோசிஷா மன்வந்திரம்-தூத்ரஸ், முனிவர்கள் : தத்தோலி சாயாவனா, ஸ்தம்பா, ப்ரனா, காசிப, ஒளர்வா, பிரஹஸ்பதி. 3. மூன்றாவது-ஒளத்தமாவே மூன்றாவது மனு. தேவர்களுக்குப் பாவனர்கள் என்று பெயர். கெளகுருந்தி, டால்பியா, சங்கா, பிரவாஹனா, சிவா, சீதா, சஸ்மிதா ஆகியோர் சப்த ரிஷிகளாவர்.