பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/693

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மச்ச புராணம் 665 4. நான்காவது தாமசமே நான்காவது மனு. ஏழு முனிவர்கள்-கவி, பிருத்து, அக்னி, அகபி, கபி, ஜல்பா திமனா தேவர்களுக்கு சாத்யாஸ் என்று பெயர். 5. ஐந்தாவது ரெய்வதாவே ஐந்தாவது மனு, தேவர்கள் அபுதரஜஸ் எனப்பட்டனர். தேவவாஹீ. சுவாஹீ, பார்ஜன்ய, சோமபாமுனி, ஹிரண்ய ரோமா, சப்தஷ்வா ஆகிய சப்த ரிஷிகள். - 6. ஆறாவது-சக்oஸாவ ஆறாவது மனு. தேவர்கள் லேகாஸ் எனப்பட்டனர். சப்தரிஷிகள், பிருகு, சுதாமா, விரஜா, சஹறிவினு, நதா வைவஸ்வன், அடினமா. 7. ஏழாவது-இப்பொழுது நடைபெறும் மன்வந்திரம். வைவஸ்வத மனு என்று பெயர். அத்ரி, வசிட்டர், காசிபர், கெளதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்கினி ஆகிய ஏழு ரிஷிகள். தேவர்கள் சத்யாஸ் எனப்பட்டனர். 8. எட்டாவது-சாவர்ணி எட்டாவது மனு, அஸ்வதாமா, சரத்வன, கெளசிகா, காலவ, விடானந்த, காசிடர், ராமா ஆகியோர் சப்த ரிஷிகளாவர். 9. ஒன்பதாவது மனு ரெளக்யா, பத்தாவது மனு பெளத்யா, பதினோராவது மனு மேருசாவரணி, பன்னிரண் டாவது மனு ரிதா, பதின்மூன்றாவது மனு ரித்தமா, பதினான்காவது மனு விஸ்வகேசனா ஆகியவர் ஆகும். இதன் பின்பு பிருத்துவின் தோற்றம் விவரிக்கப்படுகிறது. சூரிய வம்சம் காசியப முனிவன் அதிதி மூலம் பெற்ற மகன் வைவஸ்வத மனு ஆவான். இவனே சூரியனும் ஆவான். இவனுக்கு மூன்று மனைவியர் இருந்தனர். இவருள் சம்ஜனா என்பவருக்கு வைவஸ்வத மனு என்ற பிள்ளையும், யமன், யமுனா என்ற இரட்டைப் பிள்ளைகளும் பிறந்தனர்.