பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/694

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


666 பதினெண் புராணங்கள் இரண்டாவது மனைவியாகிய ரஜனிக்கு ரேவதா என்ற மகனும், மூன்றாவது மனைவியான பிரபா என்பவருக்கு பிரபதா என்ற மகனும் தோன்றினர். சூரியனின் மிகுதியான ஆற்றலைத் தாங்க முடியாத சம்ஜனா தன்னைப் போலவே ஒரு பெண்ணைத் தன் உடம்பிலிருந்து உண்டாக்கினாள். அந்த வடிவத்திற்குச் சாயா என்று பெயர். சாயாவிற்கும் அவள் மூலமான சம்ஜனாவிற்கும் வேறுபாடு அறியாத சூரியன் சாயா மூலம் சாவர்ணி மனு, சனி என்ற பிள்ளைகளையும், தப்தி, விஷ்தி என்ற பெண் களையும் பெற்றான். சாயாவிற்கும், சம்ஜனாவின் மகன் யமனுக்கும் சண்டை வர, யமன் அவளை உதைக்க காலைத் தூக்கினான். உடனே சாயா, ‘என்னை உதைக்கத் துக்கிய காலில் புழு மண்டுவதாக என்று சாபமிட்டாள். உடனே சூரியனிடம் சென்று யமன் பேசினான். தந்தையே, ஏதோ முன்கோபத்தால் நான் என் தாயை உதைப்பேன்’ என்று காலைத் துக்கினேன். உடனே என் தாய் உன் கால் புழுத்து ஒழிவதாக என்று சாபமிட்டாள். இது விந்தையிலும் விந்தை. எந்தத் தாயும் தன் மகனுக்கு இவ்வாறு சாபமிடமாட்டாள். ஆகவே இவள் என் தாய் அல்ல என்று கூறியவுடன் சூரியன் சாயாவைக் கேட்க அவளும் உண்மையை ஒப்புக் கொண்டாள். உடனே சூரியன் தன் மாமனார் ஆகிய விஸ்வகர்மாவிடம் சென்று கேட்க, விஸ்வகர்மா உன்னிடம் இருந்து வந்த அன்றைக்கே சம்ஜனா பெண் குதிரை வடிவில் காட்டில் வாழ்கிறாள் என்றான். சூரியனைப் பார்த்து விஸ்வகர்மா “எல்லை மீறிய தேஜஸ் உன்னிடம் இருப்பதால்தான் யாரும் உன்னை நெருங்க முடிவ தில்லை. அந்தத் தேஜஸில் ஒரு பகுதியை வெட்டி எடுத்து விடுகிறேன். அதன் பிறகு அனைவரும் உன்னுடன் சகஜமாகப் பழகுவார்கள்” என்று கூறிவிட்டு, சூரியனின் தேஜஸில் ஒரு