பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/698

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

670 பதினெண் புராணங்கள் உலகத்தில் உள்ள உயிர்கள் பேசிக் கொள்ளும் பாஷைகள் அனைத்தும் புரிந்து கொள்ளும்படியான ஆற்றல் இருந்தது. அதனால் தோட்டத்தில் நடந்து கொண்டு இருந்த பிரம்மதத்தன் திடீரென்று சிரித்தான். அவன் அவ்வாறு சிரிப்பதற்குரிய நிகழ்ச்சி அங்கே நடந்தது. இரண்டு எறும்புகள் தமக்குள் பேசிக் கொண்டிருந்ததை அரசகுமாரன் கவனித்தான். ஆண் எறும்பு பெண் எறும்பி னிடம் நெருங்கிச் சென்ற பொழுது, பெண் எறும்பு முறைத்துக் கொண்டு, ‘என் பக்கத்தில் வராதே. இனி என்னோடு பேச வேண்டாம் என்று கூறிற்று. ஒன்றும் புரியாத ஆண் எறும்பு, நான் ஒரு தவறும் செய்யவில்லையே. எதற்காக என்னைக் கோபிக்கின்றாய் என்று கேட்டது. அதற்கு அந்தப் பெண் எறும்பு, "அதற்குள் நீ செய்த காரியத்தை மறந்துவிட்டாயா? நேற்று உனக்குக் கிடைத்த சர்க்கரைத் துண்டத்தை வேறொரு பெண்ணுக்கு நீ தந்ததை மறந்து விட்டாயா? என்று கோபத்துடன் கேட்டது. ஆண் எறும்பு, நான் ஒரு பாவமும் அறியேன். பக்கத்தில் நீதான் இருக்கிறாய் என்று நினைத்து சர்க்கரைத் துண்டத்தைக் கொடுத்து விட்டேன். இனி அப்படி நடக்காது. என்னை மன்னித்துவிடு' என்று கூறியவுடன் பெண் எறும்பு தன் கோபத்தை மறந்துவிட இரண்டும் கூடிக் குலாவின. எறும்புகளின் இந்த உரையாடலும் பிறகு அவை கூடிக் குலாவியதும் பிரம்மதத்தனுக்குச் சிரிப்பை உண்டாக்கியது. காரணமில்லாமல் அவன் சிரித்ததைக் கண்ட அவன் மனைவி, "ஏன் சிரிக்கிறீர்கள்?’ என்று கேட்க, பிரம்மதத்தன் நடந்தவற்றைக் கூறினான். ஆனால் எறும்புகளின் உரையாடலைத் தன் கணவன் கேட்டான், புரிந்து கொண்டான் என்பதை அவன் மனைவி நம்பத் தயாராக இல்லை. அவன் ஏதோ தன் மேல் குறை கண்டுதான் சிரிக்கிறான் என்ற