பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/699

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மச்ச புராணம் 671 முடிவுக்கு வந்த அவள், அவனிடம் கடுங்கோபம் கொண்டு தனியே போய்விட்டாள். அவளை எப்படிச் சமாதானம் செய்வது என்று தெரியாமல், படுக்கையில் புரண்டு கொண் டிருந்த பிரம்மதத்தனுக்கு விஷ்ணு கனவில் வந்தார். "பிரம்ம தத்தா! கவலைப்பட வேண்டாம். நாளை காலை பொழுது விடிந்ததும் உன் பிரச்சினைக்கு முடிவு வந்துவிடும்” என்று கூறிப் போய்விட்டார். இது இப்படி இருக்க, பிரம்மதத்தன் முற்பிறப்பில் நான்கு சகோதரர்கள் உலக வாழ்க்கை வெறுத்து தவம் செய்தனர் அல்லவா? அவர்கள் மறுபிறப்பில் சுதரித்ரா என்ற பிராமணனுக்குப் பிள்ளைகளாய்ப் பிறந்தனர். பறவையாக இருக்கும் பொழுதே உலக வாழ்வில் ஈடுபட மனம் இல்லாமல் இருந்தமையின் அந்த நால்வரும் காட்டிற்குச் சென்று தவம் செய்ய வேண்டுமென்று விரும்பிப் புறப்பட்டனர். ஆனால் அவர்கள் தந்தை அவர்களை விடுவதாக இல்லை. அவன் அவர்களைப் பார்த்து, “பிள்ளைகளே! நீங்கள் தவம் செய்யப் போவது என்பது சரியான காரியம் அன்று. நீங்கள் நால்வரும் இவ்வாறு போய்விட்டால் என் முதுமைக் காலத்தில் என்னை யார் கவனித்துக் கொள்வார்கள்?’ என்றான். அது கேட்ட மைந்தர்கள், "தந்தையே! கவலை வேண்டாம் பக்கத்து நாட்டில் பிரம்மதத்தன் என்ற மன்னன் ஆட்சி செய்து கொண்டிருக் கிறான். அவனிடம் சென்று நாங்கள் சொல்லும் நாலு வார்த்தைகளை மட்டும் சொல்லுங்கள். பசுமாடு, வேடர்கள், மான்கள், பறவைகள் என்ற இந்த வார்த்தைகளை மன்னனிடம் சொன்னால் உங்கள் தேவைக்கு அதிகமாகவே பொன்னும் பொருளும் தருவான். பெற்றுக் கொண்டு செளகரியமாக இருங்கள்” என்று கூறிவிட்டுக் காட்டிற்குப் போய்விட்டனர். விஷ்ணு கனவில் சொன்னதில் இருந்து எப்பொழுது பொழுது விடியும் என்று காத்துக் கொண்டிருந்த மன்னன்