பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/703

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மச்ச புராணம் 675 இந்த முடிவின்படி கச்சன், சுக்கிராச்சாரியாரிடம் சென்றான். குருவே! நான் பிரஹஸ்பதியின் மகன் என்றாலும் தங்களுக்குச் சீடனாக இருந்து ஆயிரம் வருடங்கள் பணி புரிய விரும்புகிறேன்' என்று கேட்டுக் கொண்டான். மிருத்யு சஞ்சீவினி பற்றி அவன் ஒன்றும் அறியான். அவன் உள் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாத சுக்கிராச்சாரியார் அவனைச் சீடனாக ஏற்றுக் கொண்டார். சுக்கிராச்சாரியாருக்குப் பணி புரிந்து வந்த கச்சன் மீது காதல் கொண்டாள் தேவயானி. ஐந்நூறு ஆண்டுகள் கழிந்தன. பிருஹஸ்பதியின் மகனே கச்சன் என்பதை அசுரர்கள் அறிந்து கொண்டனர். பிரஹஸ்பதியை வெறுத்து வ்ந்த அசுரர்கள், கச்சனையும் வெறுத்தனர். ஒரு சமயம் கச்சன் மாடுகளை மேய்த்துக் கொண்டு நெடுந் தொலைவு சென்றிருக்கும் பொழுது, அசுரர்கள் அவனைக் கொன்று அவன் உடலைப் புலிக்கு உணவாக்கினர். மாடுகள் மட்டும் தனியே ஆசிரமம் திரும்பியதைக் கண்ட தேவயானி கச்சன் யாராலோ கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்று கருதித் தன் தந்தையிடம் "தந்தையே! மாடுகள் இங்குத் திரும்பி வந்து விட்டன. கச்சன் வரவில்லை. அவனை யாரோ இல்லாமல் என்னால் உயிர் வாழ முடியாது” என்று கூறவும், சுக்கிராச்சாரியார், "மகளே! கவலை வேண்டா. நான் மிருத்யு சஞ்சீவினி மந்திரத்தின் மூலம் அவனை உயிர்ப்பிக்கிறேன்" என்று கூறி, அவனை உயிர் பெறச் செய்தார். சில நாட்கள் கழிந்தன. ஒரு சமயம் கச்சன் மலர்களைப் பறிக்கச் சென்ற பொழுது அசுரர்கள் அவனைக் கொன்று, அந்த உடலை எரித்து விட்டனர். அந்தச் சாம்பலை எடுத்து மதுவில் கலந்து தங்கள் குருவாகிய சுக்கிராச்சாரியாருக்கும் கொடுத்துவிட்டனர். கச்சன் திரும்பி வராததால் கவலையுற்ற தேவயானி தந்தையிடம் கூற, தன் தவ வலிமையால் நடந்ததை அறிந்து