பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/707

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மச்ச புராணம் - 679 செய்வதறியாத தேவர்கள் பிரஹஸ்பதியிடம் சென்றனர். இந்திரன், பிரஹஸ்பதி சுக்கிராச்சாரி வடிவம் எடுத்து, அசுரர்கள் குரு என்ற முறையில் அவர்களை ஏமாற்ற வேண்டும் என்று தந்திரம் சொல்லிக் கொடுத்தான். பிரகஸ்பதியும் இத்திட்டத்தை ஏற்றுக் கொண்டு சுக்கிராச்சாரி வடிவம் எடுத்து, பிருகு ஆசிரமம் வந்து, சுக்கிராச்சாரியிடம் பதவியை ஏற்றுக் கொண்டார். பிரஹஸ்பதியின் வஞ்சகம் தெரியாத அசுரர்கள் அவரைத் தம் குரு எனவே ஏற்றுக் கொண்டனர். பிரஹஸ்பதி அசுரரிடம் வந்த பொழுது, உண்மையான சுக்கிராச்சாரியின் தவம் ஆயிரமாவது ஆண்டை எட்டி விட்டது. சிவன் தோன்றி, மிருத்யுசஞ்சீவினி மந்திரம் சுக்கிராச்சாரிக்கும் பயன்படும் என்று கூறி மறைந்தார். தவம் கலைந்த சுக்கிராச்சாரி எதிரே உள்ள அழகான பெண்ணைப் பார்த்து, நீ யார்? ஏன் என்னிடம் பணிபுரிகிறாய்? என்று கேட்க, அப்பெண் உண்மையை மறைத்து, சுக்கிராச்சாரியின் மேல் உள்ள அன்பு காரணமாகப் பணிபுரிவதாகக் கூறினாள். அதில் மகிழ்ந்த சுக்கிராச்சாரி உனக்கு என்ன வரம் வேண்டும், கேள் தருகிறேன்' என்றார். இந்திரன், பிரகஸ்பதி ஆகியோர் செய்த துழச்சியை நன்கு அறிந்த ஜெயந்தி, ‘என்னை மணந்து கொண்டு பத்தாண்டுகள் என்னுடன் இருக்க வேண்டும்' என்றாள். சுக்கிராச்சாரி வரம் தந்தேன்’ என்று கூறி அவளை மணந்து பத்தாண்டுகள் அவளுடன் வாழ்ந்தார். ஜெயந்தி இந்த வரத்தைப் பெறுவதற்கும், பிருகஸ்பதி, சுக்கிராச்சாரியாராக மாறி அசுரர்கள் குருவாக மாறுவதற்கும் சரியாக இருந்தது. பத்தாண்டுகளுக்குப் பின், சுக்கிராச்சாரியார் ஜெயந்தியை விட்டுவிட்டுத் தம் இருப்பிடம் வந்தார். அங்கு ஆச்சரியம் காத்திருந்தது. தன்னைப் போலவே ஒரு சுக்கிராச்சாரியார் அங்கு இருப்பதைக் கண்டார். அசுரர்களை