பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/708

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


680 பதினெண் புராணங்கள் அழைத்து, நான்தான் உண்மையான சுக்கிராச்சாரி. இவர் போலி என்று எடுத்துக் கூறியும் அசுரர்கள் நம்ப மறுத்தனர். 'காலாந்தரத்தில் நீங்கள் அழியக் கடவீர்கள் என்று உண்மை சுக்கிராச்சாரி சாபமிட்டார். அந்நிலையில் போலி சுக்கிராச்சாரி மறைய பிரகஸ்பதி அங்கு நின்றார். அசுரர்கள் தங்கள் பிழையை எண்ணி வருந்தினர். உண்மை சுக்கிராச்சாரி காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டனர், என்றாலும் கொடுத்த சாபம் கொடுத்ததுதான். . புராணங்கள் லோமஹர்ஷனர், முனிவர்களுக்குப் புராணங்களின் பட்டியலைக் கொடுத்துக் கூறியதாவது : ஆரம்பத்தில் ஒரே ஒரு புராணம் மட்டுமே இருந்தது. வேத வியாசர் மூலபுராணத்தைப் பதினெட்டு மகாபுராணங்களாகப் பிரித்தார். அந்த மகாபுராணங்கள் மொத்தமும் நான்கு லட்சம் பாடல்களைக் கொண்டவை. அந்த மகா புராணங்கள் பின்வருமாறு : 1. பிரம்மபுராணம் : பிரம்மனால், மரீச்சி முனிவருக்குச் சொல்லப்பட்டது. இதில் பதின்மூன்றாயிரம் பாடல்கள் உள்ளன. 2. பத்மபுராணம் : ஐம்பத்தைந்தாயிரம் பாடல்களைக் கொண்டது. 3. விஷ்ணுபுராணம் : பராசர முனிவரால் சொல்லப் பட்டது. இருபத்து மூவாயிரம் பாடல்களைக் கொண்டது. 4. வாயுபுராணம் (சிவபுராணம்) : வாயுதேவனால் கூறப்பட்டது. இருபத்து நான்காயிரம் பாடல்களைக் கொண்டது. х