பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/709

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மச்ச புராணம் 681 5. பாகவதபுராணம் : பதினெட்டாயிரம் பாடல்களைக் கொண்டது. 6. நாரத புராணம் : நாரதரால் கூறப்பெற்றது. இருபத்து ஐந்தாயிரம் பாடல்களைக் கொண்டது. 7. மார்க்கண்டேய புராணம் : ஒன்பதாயிரம் பாடல் களைக் கொண்டது. 8. அக்னி புராணம் : அக்னி தேவனால் வசிட்ட முனிவருக்குக் கூறப்பட்டது. பதினாயிரம் பாடல்களைக் கொண்டது. 9. பவிஷ்ய புராணம் : பிரம்மனால் கூறப்பட்டது. பதினாலாயிரத்து ஐந்நூறு பாடல்களைக் கொண்டது. 10. பிரம்மவைவர்த்த புராணம் : சாவர்ணி மனுவால் நாரதருக்குக் கூறப்பட்டது. பதினெட்டாயிரம் பாடல்களைக் கொண்டது. 11. லிங்க புராணம் : பிரம்மனால் கூறப்பட்டது. பதினோராயிரம் பாடல்களைக் கொண்டது. 12. வராக புராணம் : விஷ்ணுவினால், பூமிதேவிக்குக் கூறப்பட்டது. இருபத்து நான்காயிரம் பாடல்களைக் கொண்டது. 13. ஸ்கந்த புராணம் : ஸ்கந்தனால் கூறப்பட்டது. எண்பத்தோராயிரம் பாடல்களைக் கொண்டது. - 14. வாமன புராணம் : பிரம்மனால் கூறப்பட்டது. பத்தாயிரம் பாடல்களைக் கொண்டது. 15. கூர்மபுராணம் : விஷ்ணுவினால் அவர் ஆமை வடிவில் இருந்த பொழுது கூறப்பட்டது. பதினெட்டாயிரம் பாடல்களைக் கொண்டது.