பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/710

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

682 பதினெண் புராணங்கள் 16. மச்ச புராணம் : விஷ்ணு மீன் அவதாரம் எடுத்த பொழுது கூறப்பட்டது. பதினாலாயிரம் பாடல்களைக் கொண்டது. 17. கருட புராணம் : கிருஷ்ணனால் கூறப்பட்டது. பதினெட்டாயிரம் பாடல்களைக் கொண்டது. 18. பிரம்மாண்ட புராணம் : பிரம்மனால் கூறப்பட்டது. பன்னிரண்டாயிரத்து இருநூறு பாடல்களைக் கொண்டது. வஜ்ராங்காவின் கதை இந்திரனைக் கொல்ல வேண்டும் என்று திதி என்ற காசியப முனிவரின் மனைவி விரதம் மேற்கொண்டாள். விரதத்தில் ஏற்பட்ட பிழையால் மருத்துக்கள் என்ற பெயருடன் பிறந்த பிள்ளைகள் அனைவரும் அவள் எண்ணத்திற்கு மாறாக இந்திரனின் நண்பர்களாக ஆகிவிட்டனர். இதனால் மனம் குமுறிய திதி மறுபடியும் விரதம் மேற்கொண்டாள். அவளுடைய கணவர் காசியபன் "பதினாயிரம் ஆண்டுகள் நீ தவம் செய்தால் உனக்கு ஒரு மகன் பிறப்பான். இந்திரனின் வஜ்ராயுதம் கூட அவனை ஒன்றும் செய்ய முடியாது. வஜ்ராங்கா என்ற பெயரை அவன் பெறுவான்” என்று கூறினார். பதினாயிரம் ஆண்டுகள் கழித்து வஜ்ராங்கன் பிறந்தான். அவன் வளர்ந்து காளைப் பருவம் அடைந்தவுடன் அவன் தாய் அவனிடம் பின்வருமாறு கூறினாள். "மகனே, ஆயிரக்கணக்கான பிள்ளைகளை நான் பெற்றும் அவ் வனைவரையும் இந்திரன் கொன்றுவிட்டான். எப்படியாவது அவனைப் பழிவாங்க வேண்டும். நீ உடனே போருக்குச் சென்று வா" என்று அனுப்பினாள். இந்திரனுடன் போர் புரிந்து அவனைக் கட்டி இழுத்துக் கொண்டு வந்தான். தன்