பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/715

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மச்ச புராணம் 687 வேண்டா. தாரகனைக் கொல்ல முடியும். ஓர் ஏழு வயது பாலகன் தான் அவனைக் கொல்ல முடியும். அப்படிப்பட்ட பாலகன் இன்னும் தோன்றவில்லை. சிவன்தான் அந்த பாலகனைத் தோற்றுவிக்க முடியும். அதற்குச் சில இடையூறுகள் உள்ளன. சிவன் தவத்தில் இருக்கிறார். சிவனை அடைய வேண்டும் என்று பார்வதியும் தவத்தில் இருக்கிறார். முதலாவது சிவனுடைய தவத்தைக் கலைக்க வேண்டும். இரண்டாவது பார்வதியைத் திருமணம் முடிக்க வேண்டும். அதற்கு ஒரே வழி மதனனை விட்டு சிவனுடைய தவத்தைக் கலைக்க வேண்டும் என்று கூறினார். அனைத்தும் அப்படியே நடந்தது. சிவன் பார்வதியை மணந்தார். தடயுடலாகத் திருமணம் நடைபெற்றது. சிவனுக்கும், பார்வதிக்கும் பிறந்த கார்த்திகேயன் குழந்தையாக இருக்கும்பொழுதே கோடி சூரியப் பிரகாசம் பெற்றிருந்தார். ஒரே உடம்பாயினும் ஆறு முகங்கள் பெற்றிருந்ததால், ஷடானனன் என்ற பெயரும் அவருக்கு ஏற்பட்டது. குழந்தையாக இருந்தாலும் அவன் யார் எனப் புரிந்து கொண்ட தேவர்கள் எல்லாவகையான ஆயுதங் களையும் அவர்களுக்குத் தந்திருந்தனர். இதன் பிறகு தாரகனுடன் அவர் போர் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். போர்க்களத்திற்கு வந்த கார்த்திகேயனைப் பார்த்து தாரகன் கேலி பேசத் தொடங்கினான். மற்ற பிள்ளைகளோடு சேர்ந்து பந்து விளையாட வேண்டிய நீ தவறுதலாகப் போர்க் களம் புகுந்து விட்டாய். ஒடிச் சென்று விளையாடுவாயாக என்றான் தாரகன். கார்த்திகேயன், நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ எனக்குச் சொல்லித்தர வேண்டியதில்லை. உன் படைகளை அழைத்துக் கொண்டு போருக்கு வா என்று