பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/717

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மச்ச புராணம் 689 விந்திய மலையில் சென்று வாழ்வாயாக என்று பிரம்மன் கட்டளை இட்டார். கரிய நிறம் போனவுடன் பொன் நிறத்துடன் விளங்கிய பார்வதிக்கு கெளரி என்ற பெயரும் வந்தது. சாவித்திரி அஸ்வபதி என்ற மன்னன் குழந்தைப் பேறின்மையால் நீண்ட காலம் தவம் செய்து வந்தான். பிரம்மன் தோன்றி 'உனக்கு ஆண் சந்ததிக்கு வாய்ப்பே இல்லை. பெண் குழந்தை இருக்கும் என்று வரமளித்தார். வரத்தின்படிப் பிறந்த பெண்ணுக்கு மாலதி என்று பெயரிட்டு, சாவித்திரி தேவியை வேண்டிப் பெற்ற குழந்தை ஆதலின் அவளுக்கு சாவித்திரி என்ற பெயரும் வழங்கலாயிற்று. துயுமத் சேனாவின் மகன் சத்தியவானை மணந்த அவள் வாழ்க்கையில், நாரதர் வெளிப்பட்டு, “பெண்ணே! இன்னும் ஒராண்டில் உன் கணவன் உயிர் பிரியும். தக்க விரதங்களை மேற் கொள்வாயாக’ என்று கூறிப் போனார். அந்த வருடம் முடிய நான்கு நாட்கள் இருக்கையில், சாவை எதிர்பார்த்து பூஜை முதலியவற்றில் பொழுதைப் போக்குவதற்காகக் குளத்தங் கரையில் தங்கி இருந்தனர். சத்தியவானுக்குப் பொறுக்க முடியாத தலைவலி வர, மனைவியின் மடியில் தலை வைத்துப் படுத்தான். அங்கே யமன் வந்து ஒர் அங்குல உயரமுள்ள சத்தியவான் உயிரைப் பிரித்து எடுத்துக் கொண்டு புறப்பட்டான். கற்புக்கரசியாகிய சாவித்திரியும் யமனைப் பின் தொடர்ந்தாள். பின்தொடர வேண்டா என்று யமன் தடுத்தும், சாவித்திரி அவனைப் பார்த்து இரண்டு காரணங்களால் உன்னைப் பின்தொடர்கிறேன். “முதலாவது காரணம், கற்புடைய பெண்ணாகிய நான் கணவன் எங்கே цц.—44