பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/719

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மச்ச புராணம் 691 கடைந்தனர். முதலில் வந்த சந்திரனை, சிவன் தலையில் வைத்துக் கொண்டார். அடுத்து வந்த லட்சுமியை விஷ்ணு எடுத்துக் கொண்டார். உச்சைச்சிரவம் என்ற குதிரை வர இந்திரன் எடுத்துக்கொண்டார். கடைசியாக தன்வந்திரி அமுத கலசத்தோடு வர, அசுரர்கள் அதைப் பிடுங்க முயலும் போது, விஷ்ணு பெண் வடிவெடுத்து அவர்கள் கவனத்தைத் திருப்ப, அமுதம் தேவர்களுக்கு மட்டும் பங்கிடப்பட்டது. அசுரர்களில் ஒருவனாகிய ராகு தேவ வடிவம் எடுத்து அமுதத்தை வாங்கி வாயில் ஊற்ற, உண்மை அறிந்த சூரிய சந்திரர்கள் அவன் கழுத்தை அறுத்துவிட்டனர். அமுதம் வாயளவில் தங்கியதால் ராகுவின் தலை மட்டும் தேவர்களைப் போல என்றும் இருப்பதாயிற்று. தன்னைக் காட்டிக் கொடுத்த சூரிய, சந்திரர்களைப் பிடிக்க ராகு முயல்வதுதான் கிரகணம் என்று சொல்லப்படும். கட்டட சிற்பக்கலைகள் கட்டடக் கலைக்கு மூலமாக உள்ளவர்கள் பிருகு வசிட்டர், விஸ்வகர்மா, நாரதர் முதலிய பதினெட்டு தேவர்களும், முனிவர்களும் ஆவர். சைத்ர (சித்திரை மாதத்தில் வீடு கட்டும் பணி தொடங்கக் கூடாது. வைகாசியில் துவங்குவது நற் பலனைத் தரும். மார்கழி, மாசி, பங்குனி மாதங்கள் (தமிழ் மாதம் சித்திரை 1ஆம் தேதி, அகில இந்திய கணக்குப்படி சைத்ர மாதம் 24ஆம் தேதி ஆகும். இதனைக் கொண்டு மற்ற வற்றைக் கணக்கிட்டுக் கொள்ளலாம்) அஸ்வினி, ரோகிணி, மூலம் ஆகிய நட்சத்திரங்கள், வீடு கட்டத் துவங்குவதற்கு உகந்தவை. ஞாயிறு, செவ்வாய்க் கிழமைகள் தவிர மற்ற நாட்கள் சிறப்பானவை. வீடு கட்டத் தேர்ந்தெடுக்கப்பட்ட மனை சோதனைக்குள் ளாக்கப்பட வேண்டும். ஒரு குழியை வெட்டி அதில் செடியை நட வேண்டும். அச்செடி வளர்ந்து மரமாக நின்றால் அது