பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


(2. பத்ம புராணம்) இப்புராணம் பற்றி. ஆதியில் ஒரே ஒரு புராணம்தான் இருந்தது. நூறு கோடி பாடல்களைக் கொண்டதாக அப்புராணம் இருந்தது. சென்ற கல்பத்தில் இப்புராணம் ஒன்று மட்டுமே இருந்தது. இந்தப் புராணம் மனித வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய தர்ம, அர்த்த, காமம் ஆகிய மூன்றையும் பற்றிக் கூறி இவற்றைச் செம்மையாகக் கடைப்பிடித்தால் மோட்சம் என்ற விடுதலை தானே கிட்டும் என்று கூறிற்று. இதிலிருந்து ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம். மிகப் பழங்காலத்தில் இருந்தே இந்தியர்களைப் பொறுத்தமட்டில் மனித வாழ்க்கை என்பது ஆன்மிகம், உலகியல் என்ற இரண்டையும் ஒரளவில் கலந்து வாழ்க்கையில் கடைப்பிடிப்பதையே குறிக்கோளாகக் கொண்ட சமுதாயம் ஆகும் என்பதை அறியவேண்டும். பத்ம புராணம் மிகப் பெரியதாக இருந்தமையாலும், சாதாரண மக்கள் அதைப் படிப்பது என்பது மிகக் கடினமாக இருந்ததாலும், வேத வியாசர் அதைச் சுருக்கிப் பதினெட்டு அத்தியாயங்களில் நான்கு இலட்சம் பாடல்களாகத் தொகுத்தார்.