பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/722

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


694 பதினெண் புராணங்கள் 7. கஜபாத்ரா ஐம்பத்திரண்டு தூண்களையும், 8. ஜயவாஹா ஐம்பது தூண்களையும், 9. பூநீவத்சா நாற்பத்தி எட்டு தூண்களையும், 10. விஜயா நாற்பத்தி ஆறு தூண்களையும், 11. வாஸ்துகிருத்தி நாற்பத்தி நான்கு துண்களையும், 12. சுருதிஜ்யா நாற்பத்தி இரண்டு தூண்களையும், 13. யக்ஞ பாத்ரா நாற்பது துரண்களையும், 14. விஷாலா முப்பத்தி எட்டு தூண்களையும், 15. சுஷ்லிஷ்டா முப்பத்தி ஆறு தூண்களையும், 16. வித்ரு மார்தனா முப்பத்து நான்கு தூண்களையும், 17. பாகபஞ்ச முப்பத்தி இரண்டு தூண்களையும், 18. நந்தனா முப்பது தூண்களையும், 19. மானவா இருபத்தி எட்டு தூண்களையும், 20. மானபாத்ரகா இருபத்தி ஆறு தூண்களையும், 21. சுக்ரீவா இருபத்தி நாலு தூண்களையும், 22. ஹரிதா இருபத்தி இரண்டு தூண்களையும், 23. கார்னிகரா இருபது தூண்களையும், 24. ஷடர்திகா பதினெட்டு துரண்களையும், 25. சிம்ஹா பதினாலு தூண்களையும், 26. சியாம் பத்ரா பதினான்கு தூண்களையும், 27. சமுத்ரா பன்னிரண்டு துரண்களையும், கொண்டு கட்டப்பட வேண்டும். மண்டபங்கள் முக்கோண வடிவிலேனும், அரைவட்ட வடிவிலேனும், நீண்ட சதுர வடிவிலேனும் இருக்க வேண்டும். இவற்றை அடுத்து, தான தர்மங்கள் பற்றி மச்ச புராணம் பேசுகிறது. லோமஹர்ஷனர் புராணத்தைக் கூறி முடித்தவுடன், முனிவர்கள் அவருக்கு நன்றி கூறிவிட்டுச் சென்றனர்.