பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/724

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

696 பதினெண் புராணங்கள் சோதிடம் கற்களைப் பரிசோதித்துப் பார்த்தல், மருத்துவம், அளவுகள், இலக்கணம், அரசியல் என்பவை போன்ற பல கலை விஞ்ஞான சம்பந்தமான செய்திகளையும் கொண்டுள்ளது. இதில் ராமாயண, பாரதக் கதைகள் இடம் பெற்றுள்ளன. அடுத்துள்ள உத்திர காண்டம் அளவில் சிறியதாயினும், பிறப்பு, இறப்பு மறுபிறப்பு என்பவை பற்றி விரிவாகப் பேசுகிறது. பிறப்பு, இறப்புச் சூழலிலிருந்து விடுதலை பெறும் வழியும் கூறப்பட்டுள்ளது. கருட புராணத்தின் மூலப்பகுதி எதுவும் இப்போது கிடைக்கவில்லை. இதில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் அவ்வவற்றைத் தனியே பேசும் நூல்களில் இருந்து தாராளமாக எடுக்கப்பட்டுள்ளன.

இப்புராணம் நைமிசாரண்ய வனத்தில் செளனகர் முதலானோர் கேட்க சூதா சொல்லத் தொடங்கினார். இங்கு சூதா என்று குறிப்பது தனி மனிதனை அன்று. பிராமணத் தாய்க்கும், பிராமணரல்லாத தந்தைக்கும் பிறந்தவர்களே சூதர்கள் என்று அழைக்கப்பட்டனர். ஆங்காங்கு சென்று புராணப் பிரசங்கம் செய்வதும், குதிரை மேய்ப்பதும் இவர்கள் தொழிலாகும். வியாசரின் சீடரான லோமஹர்ஷனரும் இந்தச் சூதர் இனத்தைச் சேர்ந்தவரே ஆவார். நைமிசாரண்யத்தில் கூடிய முனிவர்கள், லோமஹர்ஷனரைப் பார்த்து, "லோம ஹர்ஷனரே! தாங்கள் பெருங்கல்வி உடையவர். வியாசரின் சீடரும் ஆவீர். தாங்கள் தாம் எங்களுடைய ஐயங்களைப் போக்க வேண்டும். கடவுளர்களில் மிக மேம்பட்டவர் யார்? யாரை நாங்கள் வணங்க வேண்டும்? எந்தப் பொருளைப் பற்றி தியானம் செய்யவேண்டும்? தீமை அழிப்பவர் யார்? தர்மம் என்றால் என்ன?”