பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/725

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருட புராணம் 697 - முனிவர்களின் கேள்விகளுக்கு லோமஹர்ஷனர், "இப்பொழுது நான் கருட புராணம் பற்றிச் சொல்லப் போகிறேன். விஷ்ணுவின் வாகனமாகிய கருடனே, காசியப முனிவனுக்குச் சொல்லியதே இப்புராணம்" என்று கூறினார். முதலில் விஷ்ணு எடுத்த இருபத்தி இரண்டு அவதாரங்கள் பற்றிக் கூறுகிறேன். 1. முதல் அவதாரம் இளம் பையனாக, 2. வராகம், 3. தேவரிஷி, 4. நர-நாராயணன், 5. கபில முனிவர், 6. தத்தாத்ரேயர், 7. ருச்சி-அகுதி மகனாக, 8. நபி-மேரு மகன் உருக்கிரமா, 9. பிருத்து, 10. மத்ஸ்ய, 1. கூர்மம், 12. தன்வந்திரி, 13. மோகினி அவதாரம், 14. நரசிம்மன், 15. வாமனம், 16. பரசுராமன், 17. வேதவியாசர், 18. நாரத முனிவர், 19. இராமன், 20. கிருஷ்ணன், 21. புத்தர், 22. இனி எடுக்கப் போகும் கல்கி அவதாரம். பிரபஞ்ச உற்பத்தி பரப்பிரம்மத்தின் இலக்கணம் சொல்லி, உலகம் நீருக்குள் மூழ்கி இருந்ததையும் சொல்லி, அதில் ஒரு பொன்முட்டை இருந்தது என்பதையும் சொல்கிற வரையில் கருட புராணம், ஏனைய புராணங்களைப் போல் உள்ளது. மற்ற புராணங்கள் எல்லாம் முட்டைக்குள் பிரம்மன் இருந்தார் என்று சொல்ல, கருட புராணம், முட்டைக்குள் விஷ்ணு இருந்தார் என்று சொல்கிறது. விஷ்ணு பிரம்மனையும், சிவனையும் தோற்றுவித்தார். முட்டைக்குள் இருந்த பொருட்களைக் கொண்டு பிரபஞ்சத்தை உற்பத்தி செய்தார். மூவர் என்று இங்கே சொல்வது அவர்கள் செய்யும் தொழில்கள் பற்றியே ஆகும். பிரம்மன் படைக்கிறார், விஷ்ணு காக்கிறார். சிவன் அழிக்கிறார் என்று சொன்னாலும் இம்மூவரும் வெவ்வேறான வர் அல்லர், ஒருவரே என்பதை உணர வேண்டும். பிரம்மன் முதலில் நான்கு கணங்களை(கூட்டங்களை)ப் படைத்தார்.