பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/728

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

700 பதினெண் புராணங்கள் கோயில் அமைப்பு கோயில்கள் ஐந்து வகைகளில் அமையலாம். அவை முறையே வைரஜா, புஷ்பகா, கைலாசா, மாளகா, திரிபிஷ்டபா. இவற்றிடையே வேறுபாடு இவற்றின் அமைப்பில் உள்ளதாகும். வைரஜா சதுர வடிவிலும், புஷ்பகா நீண்ட சதுர வடிவிலும், கைலாசா வட்ட வடிவிலும், மாளகா முட்டை வடிவிலும், திரிபிஷ்டகா அறுகோண வடிவிலும் அமைந்திருக்கும். இந்த முழு அமைப்பில் உள்ளே வேண்டுமான மாற்ற அமைப்புகள் இருக்கலாம். கோயிலின் நுழைவாயிலின் பக்கத்தில் நாடகம் நடத்துவதற்குக் களம் அமைக்கப்பட வேண்டும். கோயில் பூசாரி, கோயிலுக்குச் சற்றுத் தள்ளி குடியிருக்க வேண்டும். கோயிலைச் சுற்றி நந்தவனங்கள், குளங்கள் முதலியன இருத்தல் வேண்டும். சோதிட நம்பிக்கைகள் 27 நட்சத்திரங்களில் அஸ்வினி, அனுஷம், ரேவதி, மிருகசீரிடம், மூலம், புனர்வசு, பூசம், ஹஸ்தம் என்ற இந்த நட்சத்திரங்கள் பிரயாணத்திற்கு உகந்தவை. கிணறு, குளம் வெட்ட பரணி, கார்த்திகை ஆயில்யம், மகம், மூலம், விசாகம், பூரட்டாதி என்ற நட்சத்திரங்கள் உகந்தவை. இதே நட்சத்திரங்கள் தானியம் அறுவடை செய்யவும், கோயில் கட்டவும் உகந்தவை. விதை விதைக்க ரேவதி, அஸ்வினி, சித்திரை, ஸ்வாதி, ஹஸ்தம், புனர்பூசம், அனுஷம், மிருகசீரிடம் ஆகியவை ஏற்றவையாம். இராசிச் சக்கரத்தில் உள்ள பன்னிரண்டு ராசிகளில் ஒருவன் எந்த ராசியில் பிறக்கிறானோ அது அவன் ஜென்ம ராசி (ஜென்ம லக்கினம்) எனப்படும். சந்திரன் இருக்கும் ராசியை ஜென்ம லக்கணத்தோடு எண்ணிப் பார்க்கவும். ஜென்ம லக்கினத்திலேயே சந்திரன் இருந்தால் திருப்தியுடைய