பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/729

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருட புராணம் ‘. 701 மனிதனாக இருப்பர். ஜென்ம லக்கினம் முதல் வீடு என்று எண்ண வேண்டும். சந்திரன் இரண்டாம் வீட்டில் இருந்தால் வறுமை. மூன்றாம் வீட்டில் இருந்தால் அரச மரியாதை கிடைக்கும். நான்காம் வீட்டில் இருந்தால் சண்டை ஐந்தாம் வீட்டில் இருந்தால் திருமணம். ஆறாம் வீட்டில் இருந்தால் செல்வம். ஏழாம் வீட்டில் இருந்தால் கெளரவம். எட்டாம் வீட்டில் இருந்தால் உயிர்ப் பயம். ஒன்பதில் இருந்தால் செல்வம் பத்தில் இருந்தால் வெற்றி பதினொன்றில் இருந்தால் வெற்றி. பன்னிரண்டில் இருந்தால் மரண பயம். முதல் வீட்டில் சுக்கிரனும், சந்திரனும் இரண்டாம் வீட்டில் சந்திரன், புதன், சுக்ரன், குரு மூன்றில் செவ்வாய், சனி, சூரியன்; நான்கில் புதன் ஐந்தில் சுக்கிரன், குரு, சந்திரன், கேது, ஆறில் சனி, சூரியன், செவ்வாய் ஏழில் குரு சந்திரன், எட்டில் புதன், சுக்கிரன், ஒன்பதில் குரு பத்தில் சூரியன், சனி, சந்திரன்; பதினொன்றில் எந்த கிரகம் இருந்தாலும்; பன்னிரண்டாம் வீட்டில் புதன், சுக்கிரன் இருந்தால் நலம் பயக்கும். ருச்சி முன்னொரு காலத்தில் ருச்சி என்ற முனிவர் இளமைப் பருவம் தொட்டே உலக பந்த பாசங்களில் அகப்படாமல் ஊர் சுற்றுவதையே தொழிலாகக் கொண்டிருந்தார். தியானம் செய்த நேரம் போக, சுற்றி வருவதையே தொழிலாகக் கொண்டிருந்த அவரை அவர் பிதுர்க்கள் ஒருமுறை சந்தித்துப் பின்வருமாறு கூறினர். “ருச்சி! நீ இவ்வாறு எதிலும் பற்றில்லாமல் சுற்றி வருவது பட்டதன் நோக்கம் ஒருவன் ஒருத்தியை மணந்து குழந்தைகள் பெற்று, நேர்மையான வழியில் வாழ்ந்து வாழ்வின் பயனை அடைவதாகும். இல்லறத்தில் இருக்கின்ற காரணத்தால் பந்த