பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பதினெண் புராணங்கள் பிரம்ம புராணத்தை அடுத்து சிறப்புக் கொண்டது பத்ம புராணம் ஆகும். ஒரு காலத்தில் இந்த பூமியே ஒரு தங்கத் தாமரை வடிவுடன் விளங்கியதால், இதற்குப் பத்ம புராணம் என்று பெயர் வந்தது. வேத வியாசருக்குப் பின் இப்புராணம் மேலும் சுருக்கப்பட்டு ஏழு அத்தியாயங்களையும், 55000 பாடல்களையும் கொண்டு விளங்குகிறது. இக் காண்டங்கள் சிருஷ்டி காண்டம்; பூமி காண்டம் சுவர்க்க காண்டம் பிரம்ம காண்டம்; பாதாள காண்டம் உத்தர காண்டம் கிரியா யோகா முதலியனவாகும். சிவசர்மாவின் கதை முன்னொரு காலத்தில் பல முனிவர்கள் ஒன்றுகூடி உரோமஹர்ஷனரிடம் பத்ம புராணத்தைத் தங்களுக்குக் கூறுமாறு வேண்டினர். அந்த வேண்டுகோளுக்கிணங்கி உரோமஹர்ஷனரே சிவசர்மாவின் கதையைச் சொல்ல ஆரம்பித்தார். மிகப் பழங்காலத்தில் துவாரகையில் சிவசர்மா என்ற பிராமணர் வாழ்ந்து வந்தார். வேதங்கள், அதன் அங்கங்கள், சாத்திரங்கள் ஆகியவற்றை நன்கு அறிந்திருந்த சிவசர்மா, மந்திர சக்தியால் பல அற்புதங்களைச் செய்யும் ஆற்றலையும் பெற்றிருந்தார். - அவருக்கு யக்ஞசர்மா, வேதசர்மா, தர்மசர்மா, விஷ்ணு சர்மா, சோமசர்மா என்ற ஐந்து புதல்வர்கள் இருந்தனர். தம் பிள்ளைகள் தம்மிடத்தில் எவ்வளவு பணிவும், சொன்னதைச் செய்யும் திட சித்தமும் உடையவர்களாக இருந்தனர் என்பதை அறிய சிவசர்மா விரும்பினார். தம்முடைய அபூர்வ சக்தியால் தம் மனைவியைப் போல மாய மனைவியை உண்டாக்கி அவள் இறந்து போகுமாறு செய்தார். தம் மூத்த மகனாகிய யக்ஞ