பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/732

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

704 பதினெண் புராணங்கள் பேசுகின்றன. கருடபுராணம் நான்கு அத்தியாயங்களில் இதை அப்படியே எடுத்துக் கூறுகிறது. ஒரு நோயைக் கண்டு அறிவது, சிகிச்சை அளிப்பது என்பதை ஐந்து படிகளாக ஆயுர்வேதம் கூறுகிறது. அதையே கருட புராணமும் சொல்கிறது. ஐந்து படிகள் பின்வருமாறு: முதலாவது நிதானா என்று சொல்லப் படும் ஒரு நோய் தோன்றுவதற்குரிய அறிகுறிகள் வெளிப் படையாகத் தெரிவதற்கு முன்னரே குறிப்பிட்ட நோய் வர வாய்ப்புள்ளது என்று அறிவதே நிதானா எனப்படும். உதக பூர்வரூபோ எனப்படும்- நோய் ஒருவனைத் தாக்கு வதற்கு முன்னர் பல அறிகுறிகளை முன் எச்சரிக்கையாகக் காட்டுகிறது. நோயின் அறிகுறிகள் முதலில் சிறிதாகவும் ஆழ்ந்து கவனித்தால் வெளியே காணமுடியாத அளவில் தோன்றுகின்றன. அப்பொழுதே அதைக் கூர்ந்து கவனித்துத் தெரிந்துகொள்வது பூர்வரூபா எனப்படும். மூன்றாவது ரூபா எனப்படும்- நோய்க்குரிய அறிகுறிகள் அனைத்தும் வெளிப் படையாகத் தெரிகின்றன. நான்காவது உபவு:யா எனப்படும்முழு அறிகுறிகளும் தோன்றிய பிறகு, இந்த அறிகுறிகள் எந்த நோய்க்குக் காரணமாக உள்ளன என்பவற்றைக் கூர்ந்து கவனித்து மருத்துவம் செய்தல், மருந்து கொடுத்தல், உணவை முறைப்படுத்துதல், பட்டினி போடுதல் முதலானவையாம். ஐந்தாவது சம்பிராப்தி எனப்படும். நோய் நீங்கிய உடம்பு வலுவிழந்து காணப்படும் ஆதலால் மறுபடியும் படிப்படியாக அவ்வுடம்பு பழைய நிலைமைக்கு வருமாறு செய்வதே சம்பிராப்தி எனப்படும். ஜூரம் என்று எடுத்துக் கொண்டால் அது பலவகைப்படும். விக்கல், வாந்தி, தோலில் கொப்புளங்கள் தோன்றுதல், பசியின்மை, சோர்வு, தூங்கிவிழுதல் என்பவை போகத் தலைவலி, உடல்வலி, வலிப்பு, மயக்கம், தூக்கமின்மை, ஜன்னி, அதீதமான வியர்வை, தாகம் ஆகிய அறிகுறிகளும்