பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/733

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருட புராணம் 705 தோன்றலாம். இது ஜுரத்தின் நிதானா பகுதி ஆகும். இவற்றுள் எந்தெந்த அறிகுறிகள் காணப்படுகின்றன என்பதைப் பொறுமையாக இருந்து சோதிக்க வேண்டும். இவற்றை அடுத்து கருடபுராணம், கபக்காய்ச்சல், கூடியரோகம், இதயக்கோளாறு, கல்லீரல் தொழிற்படாமை, வயிறு சம்பந்தமான நோய்கள், மூலம், பூச்சிகள், கீல்வாதம் என்பன போன்ற நோய்களும் அவற்றின் அறிகுறிகளும் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. எந்தெந்த நோய்க்கு ாேந்தெந்த மருந்துகள் என்பதையும் கோடைக்காலம், மழைக்காலம் போன்ற காலவேறுபாட்டை அறிந்து மருந்துகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். நோயை அறிய முற்படும்பொழுது அது வாயு, பித்தம், கபம் என்ற மூன்றில் எதனோடு தொடர்புடையது என்பதை நுணுக்கமாக ஆராய்ந்து தெரிந்து கொள்ள வேண்டும். கவசங்கள் கவசங்களுள் மிக முக்கியமானது விஷ்ணு கவசம் ஆகும். இதை அணியும் பொழுது பின்வரும் பிரார்த்தனையுடன் அணியவேண்டும். பெரிய ஜனார்த்தனனை வழிபட்டு இந்தக் கவசத்தை அணிகிறேன். அந்த ஜனார்த்தனன் நோய்களில் இருந்து என்னைக் காப்பானாக. விஷ்ணு முன்பகுதியைக் காக்க, கிருஷ்ணன் பின்பகுதியைக் காக்க, ஹரி தலையைக் காக்க, ஜனார்த்தனன் இருதயத்தைக் காக்க, ரிஷிகேசன் மனத்தைக் காக்க, கேசவன் நாக்கைக் காக்க, வாசுதேவன் கண்களைக் காக்க, சங்கர்சக காதுகளைக் காக்க, பிரத்யும்னன் மூக்கைக் காக்க, அனிருத்தன் தோலினைக் காக்க, வனமாலி கன்னத் தைக் காக்க, பூரீவத்ஸன் கீழ்ப்பகுதியைக் காக்க, விஷ்ணுவின் சக்கரம் இடப்புறம் காக்க விஷ்ணுவின் கதை வலப்புறம் காக்க கருடன் என் முயற்சிகளைக் காக்க ւԼւկ.-45