பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/734

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

706 பதினெண் புராணங்கள் வராகம் என்னை நீரில் காக்க, வாமனம் ஆபத்தில் காக்க நரசிம்மம் கர்க்க கேசவன் எங்கும் காக்க விஷ்ணு எதிரிகளிடமிருந்து காக்க, விஷ்ணு என் பாவங்களைப் போக்க, என் மனத்தைக் காத்து, அறிவை வளர்க்க என்ற இவற்றைச் சொல்லி, விஷ்ணுவை வழிபட்டு இந்தக் கவசத்தை அணிகிறேன். இப்பொழுது நான் முழு தைரியத்துடன் உலகில் எங்கு வேண்டுமானாலும் செல்வேன். பேய்கள், பூதங்கள், ராட்சசர்கள் ஆகியோர் என்னை ஒன்றும் செய்ய முடியாது. தெய்வங்கள் என்னை ஓயாது காக்கின்றன. எனவே எனக்கு அச்சம் என்பதில்லை. கவசத்துக்குள் வைக்கப்படும் மந்திரங்கள் ரகசியமாக இருக்க வேண்டும். மெய்ன் 曦 துயரம் என்பது அகங்கார மமகாரங்களினால் உண்டாகிறது. நான் என்ற அகங்காரமும், எனது என்ற மமகாரமும் இருக்கும் வரை, மெய்ஞ்ஞானத்தை அடைதல் இயலாத காரியம். அஞ்ஞானம் என்பதை, ஒரு மரமாக உருவகம் செய்தால், அதனுடைய வேரும், அடிமரமும் அகங்காரமாகும். வீடு, மனை என்பன அஞ்ஞான மரத்தின் பெருங் கிளைகளாகவும், மனைவி, மக்கள், சுற்றம் என்பவர்கள் சிறு கிளைகளாகவும், பொருட்செல்வம் இலைகளாகவும் கருதபபடலாம. பாப, புண்ணியங்கள் அம்மரத்தின் பூக்கள். இன்ப, துன்பங்கள் மரத்தின் பழங்களாகும். மக்கள் உலக விவகாரங் களில் ஈடுபட்டு, அலுத்துப் போய் இம்மரத்தின் அடியில் ஒதுங்குகின்றனர். இந்த மரத்தின் அடியில் தங்கிப் பெறும் மகிழ்ச்சி, துன்பம் எதுவாயினும் அவை நிலையானவை அல்ல. உண்மையான மகிழ்ச்சி, நிலையான இன்பம் எப்போது