பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/735

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருட புராணம் 707 வருமென்றால், இந்த மரமும், அது தரும் நிழலும், அது தரும் பழங்களும் வெறும் மாயையே என்பதை உணரும் பொழுது தான் கிடைக்கும். கற்றறிந்தவர்கள் உண்மையான அறிவைக் கொண்டு, அல்லது மெய்ஞ்ஞானத்தின் உதவியால் இந்த அஞ்ஞானத்தை வெட்டி வீழ்த்துகின்றனர். இம்மரத்தை வெட்டி வீழ்த்திய வர்களே, மெய்ஞ்ஞானிகள் எனப்படுவர். அவர்கள் பரப் பிரம்மத்திடம் ஐக்கியமானவர்கள். அவர்களே உண்மையான இன்பத்தைக் கண்டவர்கள் ஆவர். அஞ்ஞானத்தில் மூழ்கிய வர்கள் இந்த பூத உடம்பும், ஆன்மாவும், வெவ்வேறானவை என்று தெரியாமல் இரண்டையும் ஒன்றாக்கிக் குழம்புகின்றனர். ஞானம் என்பது என்ன? தங்குவதற்கு ஒரு வீடு, உடல் நிலை பெற உணவு, அஞ்ஞானத்தைப் போக்கும் மெய்ஞ்ஞானம் இவை தவிர எஞ்சிய அனைத்தும் பயனற்றவை. மெய்ஞ்ஞானத்தை நாடுபவன் பின்வருமாறு பிரார்த்தனை செய்கிறான்: "நான் இந்த பூதவுடம்பல்லன், ஒளி பொருந்திய பிரம்மமே ஆவேன் நான் என்னைப் பொறுத்தவரை பிறப்பு, இறப்பு ஒன்றுமில்லை. இந்த உலகத்திற்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை. ஒளி பொருந்திய பரப்பிரம்மமாகிய யான், பஞ்ச பூதங்களில் இருந்து வேறுபட்டு நிற்பவன். ஒளி பொருந்திய பிரம்மமாகிய நான் தங்குவதற்குத் தனியாக ஓர் இடம் இல்லை. எங்கும் நிறைந்திருக்கும் இயல்பினன் யான். ஒளி பொருந்திய பிரம்மமாகிய என்னைத் தொடவோ, முகரவோ இயலாது. நான் கேட்பதும் இல்லை, பேசுவதும் இல்லை. எனக்கு எந்தப் பொறிபுலன்களும் இல்லை. மூச்சு விடும் உயிரல்லன் யான். அஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்டவன் யான். என்றும் இன்பமுடையவனாய், அனைத்தையும் அறிந்தவனாய், தூய்மையானவனாய் இருப்பவனே யான்.”