பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/746

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

718 பதினெண் புராணங்கள் இங்குள்ள முனிவர்களைத்தான் நீங்கள் அழைத்தீர்கள் அவர்கள் தாம் வருகிறார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தேன். என்னுடைய மாமனார். அவர் தகப்பனார், அவருடைய தகப்பனார் ஆகிய மூவரும் வந்து உட்கார்ந் திருந்தார்கள். மாமன்மாரின் எதிரே இந்த மரவுரியைக் கட்டிக் கொண்டு வர வெட்கமாக இருந்தது. மேலும் பெரிய அரசராகிய அவருக்கு மிக எளிய உணவைத் தருவதற்கு மிகவும் வெட்கமாக இருந்தது. அதனால்தான் ஒடி ஒளிந்து கொண்டேன்’ என்று சொன்னாள். நம்முடைய பிதுர்க்கள் நாம் அழைக்கும் விருந்தினர்கள் உடம்பில் புகுந்து கொண்டு நாம் அளிக்கும் உணவை உட்கொள்ளுகிறார்கள் என்பதை நீ தெரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறி முடித்தார் விஷ்ணு. நால்வகைப் பிறப்பு உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் பிறப்பின் அடிப்படையில் நான்கு வகையாகப் பிரிக்கப்படும். முட்டையில் பிறப்பன அண்டஜா என்றும், வேர்வையில் பிறப்பன ஸ்வேதஜா என்றும், செடி கொடியில் பிறப்பன உத்பீஜா என்றும், நடக்கும் ஜீவராசிகள் ஜராயுஜா என்றும் கூறப்படும். ஒவ்வொரு ஆத்மாவும் ஒவ்வொரு வகைப் பிறப்பிலும் பிறந்து, அடுத்தடுத்து மேல் பிறவி அடைந்து இறுதியாக மனிதராகப் பிறக்கின்றனர். ஒவ்வொரு ஆத்மாவும் ஒவ்வொரு வகையிலும் இருபத்தியொரு லட்சம் தடவை பிறந்து, நான்காவது பிறவிக்கு வரும்பொழுது எண்பத்தியோரு லட்சம் பிறப்பை அடைகின்றனர். இதே கருத்தை நம் நாட்டில் தோன்றிய மாணிக்கவாசகர் "புல்லாய், பூடாய், புழுவாய், மரமாய், பல்விருகமாய்,