பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/747

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருட புராணம் 719 பறவையாப், ப7ம்ப7ம், கல்வாய், மனிதர7ம் என்று வரும் அடிகளில் குறிப்பிடுவதையும், ஒவ்வொரு ஆத்மாவும் இத்தனையும் தாண்டி வருகிறது என்பதையும் அதே பாடவில், ". இத்தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்” என்று கூறுவதைக் காண்க எண்டத்தோரு லட்சம் பிறவிகள் என்று கருடபுர7ணம் கூறுவதைத் திருஞானசம்பந்தர் உரைசேரும் எண்பத்து நான்கு நூறாயிரமாம் யோனி பேதம் நிறைசேரப் படைத்து அவற்றின் உயிர்க்கு உயிராய் அங்கங்கே நின்றான் கோயில் என்று திருவழிமழலைப் பதிகத்தில் கூறுவதையும் காணலாம்) உயிர் வாழ்க்கை கருடன் விஷ்ணுவைப் பார்த்து, வேதத்தில் சொல்லப்பட்ட படி நூறாண்டு வாழ்பவர் குறைவாகவே உள்ளனர். பலரும் இதை எட்டாமல் இறந்து விடுகின்றனரே, ஏன்? விஷ்ணு : அவரவர்கள் செய்த புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப, ஆயுள் கணிக்கப்படுகிறது. உடலமைப்பு அடுத்து விஷ்ணு சர ராசிகளின் உடலமைப்புப் பற்றிப் பின்வருமாறு கூறினார். மனித உடல் என்பது தோல், சதை, இரத்தம், கொழுப்பு. எலும்பினுள் இருக்கும் ஜவ்வு, எலும்பு, உயிர் என்பவற்றால் ஆனது. பஞ்ச பூதங்களும் உடலமைப்பிற்கு உதவுகின்றன.