பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/749

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருட புராணம் 721 கெண்டைக்கால் சுதல லோகத்துடனும், முட்டிக்கால் தராதல லோகத்துடனும், தொடைகள் ராஜாள லோகத்துடனும், இடுப்பு பாதாள லோகத்துடனும் தொடர்பு கொண்டுள்ளது. கொப்பூழ் பூலோகத்துடனும், வயிறு புவர்லோகத்துடனும், இருதயம் சொர்க்க லோகத்துடனும், தொண்டை மகரலோகத்துடனும், முகம் ஜனலோகத்துடனும், நெற்றி தடலோகத்துடனும், உச்சந் தலை சத்திய லோகத்துடனும் தொடர்புடையது. இவ்வாறாகப் பதினான்கு லோகங்கள் மனிதனின் உடம்புடன் தொடர்பு கொண்டுள்ளன. புண்ணிய ஸ்தலம் எனப்படும் இடமே தீர்த்தமாகும். கங்கையும், அதனைச் சார்ந்த இடங்களும் மிகப் புண்ணியம் வாய்ந்த இடங்களாகும். அவற்றில் மிகச் சிறப்பானவை ஹரித்துவாரா, பிரயாகை, கங்கா சாகரம் முதலியவையாகும். வாரணாசியும் சிறந்த தீர்த்தமாகும். ஏனெனில் சிவனும், விஷ்ணுவும் அங்கு எப்பொழுதும் இருக்கின்றனர். தானம் செய்வதற்குக் குருக்ஷேத்திரம் சிறந்த இடமாகும். பிரபசா, துவாரகை, சரஸ்வதி, கேதாரம் ஆகிய இடங்களும் புண்ணிய பூமிகளாகக் கருதப்படுகின்றன. ஒருவர் புண்ணிய பூமிக்குச் சென்றுதான், பரப்பிரம்மத்தை நினைத்துத் தவம் செய்ய வேண்டும் என்பதில்லை. வீட்டில் அமர்ந்து பரப்பிரம்மனை நினைத்துத் தியானம் செய்தால், அந்த வீடே புண்ணிய தீர்த்தத்தின் மகிமையைப் பெறுகிறது. தீர்த்தங்களில் கயை மிகப் பிரபலமானதாகக் கருதப் படுகிறது. நீண்ட காலத்துக்கு முன்னர் கயாசுரன் என்றோர் அசுரன் இருந்தான். இவன் கடுமையான தவம் செய்வதைக் கண்டு அஞ்சிய தேவர்கள், விஷ்ணுவின் உதவியை நாடினர். விஷ்ணுவும் அவர்களுக்கு உதவி புரிவதாகக் கூறினார். ս.ւ.-46