பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்ம புராணம் 47 அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் சோமசர்மா தொண்டு செய்தான். ஒருநாள் திடீரென்று, உன்னிடம் அமிர்தத்தைக் கொடுத்து வைத்திருந்தேனே, அதைக் கொண்டுவா’ என்றார். மகனுக்குக் கட்டளையிடுவதற்கு முன்பே சிவசர்மா அந்த அமிர்தத்தைக் காணாமல் போகுமாறு செய்தார். இதை அறியாத சோமசர்மா பாத்திரம் காலியாக இருப்பதைப் பார்த்து, தன் பெருஞ் சக்தியால் அந்தப் பாத்திரம் நிறைய அமிர்தத்தை வரவழைத்துத் தந்தையிடம் கொண்டு நீட்டினான். மகனுடைய சக்தியில் மகிழ்ச்சி அடைந்த சிவசர்மா மனைவியை அழைத்துக் கொண்டு நேரே விஷ்ணு லோகம் போய்விட்டார். தனியே விடப்பட்ட சோமசர்மா ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் பொழுது துர்த்தேவதைகள் அவனைச் சூழ்ந்துகொண்டு அவன் கவனத்தைத் திருப்ப முயன்றன. தேவதைகளைக் கண்டு பயத்தால் இறந்து போனான். அதனால் அடுத்த ஜென்மத்தில் ஹிரண்யன் என்ற அரக்கனுடைய மகனாகப் பிரகலாதன் என்ற பெயருடன் பிறந்தான். மிகுந்த புண்ணியம் செய்திருந்த தால் அரக்கனாகப் பிறந்தும், மிகுந்த விஷ்ணு பக்தனாக விளங்கினான் பிரகலாதன். விருத்ராசுரன் கதை காசிப முனிவரின் மனைவியருள் திதி என்பவள் தேவர்களுக்கு விரோதிகளான தைத்தியர்களைப் பெற்றுக் கொண்டிருந்தாள். காசிபனின் மற்றொரு மனைவியும், திதியின் சகோதரியுமான அதிதி தேவர்களைப் பெற்றுக் கொண் டிருந்தாள். அவருள் இந்திரன் நான்கு கைகளுடனும், கோடி சூரியப் பிரகாசத்துடனும் பிறந்தான். நாளாவட்டத்தில் இந்த இந்திரன் மிகுந்த பலவானாகி தேவர்களுக்குத் தலைவனாகவும் ஆகிவிட்டான். திதியின் பிள்ளைகளாகிய தைத்தியர்களை