பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 பதினெண் புராணங்கள் அழித்துக் கொண்டிருந்தான். இதை அறிந்த திதி காசிப முனிவரிடம் முறையிட்டு அவர் உதவியுடன் பலி என்ற பிள்ளையைப் பெற்றாள். மிகுந்த பலசாலியாகிய இந்த பலி தேவர்களை அழிப்பதற்காகப் பெருந்தவம் செய்தான். இவன் குறிக்கோளின் ரகசியத்தை அறிந்த இந்திரன், இவன் தவம் செய்து கொண்டிருக்கும் பொழுது வஜ்ராயுதத்தால் இவனை அழித்தான். இதை அறிந்த திதி இந்திரன் செய்த அநியாயத்தைக் காசிபரிடம் கூற, அவன் செய்தது தவறு என்று அவரும் கூறிவிட்டார். எப்படியாவது இந்திரனை ஒழிக்க வேண்டும் என்று விரும்பிய திதி, மறுபடியும் காசிபரிடம் சென்று தன் விருப்பத்தைக் கூறினாள். இந்திரன்மேல் பெருஞ்சினம் கொண்ட காசிபர் தன் தலையில் இருந்து ஒரு முடியைப் பறித்து, பூமியில் எறிந்தார். விருத்ராசுரன் என்ற பெயருடன் அந்த முடியிலிருந்து ஒரு அசுரன் தோன்றி, "எனக்கு இடும் கட்டளை என்ன?’ என்று காசிபரிடம் கேட்டான். “எப்படியும் இந்திரனை ஒழித்துவிடு” என்று கட்டளையிட்டார். இந்த நோக்கத்துடன் புறப்பட்ட விருத்ராசுரன் போர்க்கலை பயின்று கொண்டிருந்தான். இதை அறிந்த இந்திரன் இவனைப் போர் செய்து அழிக்க முடியாது, தந்திரத்தால் தான் அழிக்க முடியும் என்று நினைத்து சப்த ரிஷிகளையும் அழைத்தான். “நீங்கள் எனக்காக விருத்ராசுரனிடம் செல்லுங்கள். தேவாசுரப் பகையை இனி வளர்க்க வேண்டாம் என் ஆட்சியில் பாதியை அவனுக்குக் கொடுக்கிறேன். நாங்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்து ஆட்சி செய்யலாம் என்று சொல்லி அவனை அழைத்து வாருங்கள்” என்று வேண்டிக் கொண்டான். முனிவர்கள் விருத்ராசுரனிடம் சென்று இதைச் சொல்ல, விருத்ராசுரன் அதை ஏற்றுக் கொண்டான். உடன்படிக்கைப்படியே இந்திரன் ஆட்சியை இரண்டாகப் பிரித்து ஒரு பகுதியை விருத்ரா