பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 பதினெண் புராணங்கள் இறுதியாக ஒர் ஆண் பன்றி, அதன் மனைவியாகிய பெண் பன்றி, அவற்றின் குட்டிகளாகிய ஆண் பெண் பன்றிகள் அனைத்தும் ஒன்றாக நின்ற இடத்திற்கு வந்தனர். இஷ்வாகுவின் வீரர் பலர் அப்பன்றிகளை எதிர்க்க பலரைத் தம் கொம்புகளால் குத்திக் கிழித்து விட்டது. வியப்படைந்த இஷ்வாகு மன்னன் தானே அந்த ஆண் பன்றியை அம்பை எய்து கொன்றான். உடனே பெண்பன்றி சீறிப் பாய்ந்தது. இஷ்வாகு அம்பு பட்டு அப் பெண் பன்றி குற்றுயிரும், கொலை உயிருமாக இரத்தம் வழியக் கிடந்தது. இஷ்வாகுவின் மனைவியாகிய சுதேவா இரக்கப்பட்டு அப்பன்றியின் முகத்தில் நீர் தெளித்து, குடிக்கவும் நீர் கொடுத்தாள். அப் பெண்பன்றி பேச ஆரம்பித்தவுடன் சுதேவா ஆச்சரியப்பட்டுப் போனாள். உடனே பெண் பன்றியைப் பார்த்து, நீ யார்? உன் கணவன் யார்? என்று விவரம் கேட்டவுடன் அப் பெண்பன்றி தன் கணவன் பற்றி விவரம் சொல்லலாயிற்று: ஒரு காலத்தில் சுமேரு உச்சியில் புலஸ்தியன் என்ற முனிவர் தவம் செய்துகொண்டு இருந்தார். ரங்க வித்யாதரன் என்ற கந்தர்வன் அருகில் நின்று பாடிக்கொண்டிருந்தான். புலஸ்தியனுடைய தவம் கலையத் தொடங்கியதால், அவர் கந்தர்வனை அழைத்து, பாடல் நன்றாக இருக்கிறது. ஆனாலும் அது என் தவத்திற்கு இடையூறாக இருப்பதால் வேறு எங்காவது சென்று பாடு என்று கூறினார். அந்த கந்தர்வன் "சுமேருமலை அனைவருக்கும் சொந்தம் பாடுவது என் உரிமை. அதைக் கேட்க நீ யார்? உனக்கு இந்த இடம் பிடிக்கவில்லை யானால் வேறு எங்காவது சென்று தவம் செய்' என்று கூறிவிட்டான். சில நாட்களில் புலஸ்திய முனிவர் காட்டில் வேறொரு பகுதிக்குச் சென்று தவம் செய்யத் துவங்கினார். அவர் அங்கே சென்றிருப்பதை அறிந்த கந்தர்வன் ஒரு குறும்பு செய்ய வேண்டும் என்று முடிவு செய்தான். அதனால் ஒரு