பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்ம புராணம் 51 பன்றி வடிவெடுத்துக்கொண்டு புலஸ்திய முனிவர் தங்கியிருந்த பர்ணசாலையை அடுத்த பூமியைத் தோண்டத் துவங்கினான். தவம் கலைந்த புலஸ்திய முனிவர் இது சாதாரண காட்டுப் பன்றி அன்று, ரங்க வித்யாதரன் என்ற பழைய கந்தர்வன்தான் என்பதை அறிந்துகொண்டார். கடுஞ்சினம் கொண்ட புலஸ்திய முனிவர் நீ பூமியில் பன்றியாகப் பிறக்கக் கடவாய்! என்று சாபமிட்டார். சாபத்தைக் கேட்டு நடுங்கிப் போன வித்யாதரன் தன்னை மன்னிக்குமாறு வேண்டினான். முனிவர், ‘இஷ்வாகு மன்னனுடைய அம்பு உன்னைக் கொல்லும்போது, நீ பழைய கந்தர்வ வடிவம் பெறுவாய்' என்று சாப விமோசன வழியும் தந்தார். "இப்பொழுது உன் கணவனாகிய இஷ்வாகு அம்பு பட்டு என் கணவன் உய்கதி அடைந்து விட்டான்” என்று கூறி முடிக்கவும் 'சுதேவா! உன்னுடைய கதை என்ன? என்று கேட்க, பெண் பன்றி தன் கதையைக் கூறத் துவங்கியது: ஒரு காலத்தில் பூரீபுரம் என்ற ஊரில் வசுதத்தா என்ற பிராமணன் வசித்து வந்தான். அவனுக்குச் சுதேவா என்ற பெண் இஷ்வாகுவின் மனைவி சுதேவா வேறு இவள் வேறு இருந்தாள். நல்ல கல்வி அறிவு உடையவனாயினும், தனக்கு ஒரே பெண் என்ற காரணத்தால், மகளுக்கு அளவுமீறிச் செல்லம் கொடுத்து ஒரே அகங்கார சொரூபமாக அவளை வளர்த்து வந்தான். அவளுக்கு மணப் பருவம் வந்ததும், எத்துணையோ பேர் அவளை மணக்க முன்வந்தும் வகதத்தா தன் மகளை அவர்களுக்கு மணம் செய்து கொடுக்க மறுத்து விட்டான். தன் ஒரே பெண்ணைப் பிரிந்திருக்க முடியாததால் அனாதையாக உள்ள ஒருவனுக்குத் தன் மகளை மண முடித்து விட்டோடு மாப்பிள்ளையாக வைத்துக் கொள்ள விரும்பினான். சிவசர்மா என்ற ஏழை பிராமணனுக்குத் தன் மகளை மணமுடித்து வீட்டோடு வைத்துக் கொண்டான். அகங்கார வடிவினளாகிய சுதேவா கணவனைத் துளசிபோல