பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 பதினெண் புராணங்கள் போனவனை நினைத்து அவதிப்பட்டு உன் இளமையை ஏன் பாழாக்கிக் கொள்கிறாய்? எங்கள் எஜமானர் உங்களை மணந்து கொள்ளத் தயாராக இருக்கிறார் என்று கூறியவுடன், 'உங்கள் எஜமானர் யார்?' என, இந்திரன்! என்று அவன் விடை கூறியதும், 'உன் எஜமானனை இங்கு வரச் சொல்' என்றாள். முழு அலங்காரங்களுடன் இந்திரன் அங்கு வந்தான். இந்திரனை நன்றாகக் கடிந்து கொண்டு, இப்படிப்பட்ட பாவச் செயல்களில் தேவேந்திரன் இறங்கக் கூடாது' என்று ஏசி அனுப்பி விட்டாள். இந்த நிலையில் தன் தீர்த்த யாத்திரையை முடித்துக் கொண்டு கிரிகலா வீடு திரும்பத் தயாரானான். அப்போது ஒரு அசரீரி பின்வருமாறு கூறிற்று: 'கிரிகலா, இத்தனை தீர்த்தங்களில் நீ குளித்தும் கடுகளவு புண்ணியமும் சேர வில்லை. அதனால் உன் முன்னோர்கள் இன்றும் நரகத்தில் தான் அழுந்தி உள்ளனர் என்று கூற, கிரிகலா நான் என்ன தவறு செய்தேன்? என்று கேட்டான். அசரீரி, ‘உன்னையே நம்பி இருக்கும் உன் மனைவியை அழைத்துக் கொண்டு தீர்த்த யாத்திரை செல்லாமல், நீ மட்டும் போனதால் ஒரு பயனும் இல்லை. உடனே அவளைச் சென்று அடைவாயாக!' என்று கூறவே விரைவாக வீடு திரும்பிய கிரிகலா மனைவியோடு மகிழ்ச்சியாக இருந்தான். அப்போது அங்கே வந்த இந்திரன் கிரிகலாவைப் பார்த்து இப்படியொரு மனைவியை அடைய நீ புண்ணியம் செய்திருக்க வேண்டும். அவள் மனத்தைக் கலைக்க நான் எவ்வளவோ முயன்றும் அது முடியவில்லை. ஆகவே உங்களுக்கு ஒரு வரம் தருகிறேன். என்ன வரம் வேண்டும்?' என்று கேட்க, கிரிகலாவும் அவன் மனைவியும் “நாங்கள் நேர்மையான வழியிலிருந்து விலகாமல் இருக்க வேண்டும் என்றும், நாங்கள் வாழ்கின்ற இந்த இடம் நாரி தீர்த்தம் என்ற பெயருடன் புண்ணிய ஸ்தலமாக விளங்க