பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/87

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


58 பதினெண் புராணங்கள் அவனும் இறந்து விட்டான். இப்படியே 21 அரசர்கள் ஒருவருக்குப் பின் ஒருவராக நிச்சயம் செய்யப்பட அத்தனை பேரும் மடிந்து விட்டனர். அச்சமடைந்த திவ்யதேவியின் தந்தை தனித்தனியாக நிச்சயம் செய்யப்பட்டால் ஏற்படும் ஆபத்தை மனத்தில் கருதி, பெண்ணுக்கு சுயம்வரம் என்று ஒரு நாளைக் குறிப்பிட்டான். பல அரசர்களும், அரசகுமாரர் களும் வந்து கூடினர். என்ன காரணத்தாலோ சுயம்வரம் தொடங்கு முன்னரே கூடியிருந்தவர்களுள் சண்டை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் கொன்று கொண்டனர். அப்பா, ஏன் அந்தப் பெண்ணுக்கு இப்படி நடந்தது என்று தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது தெரியுமா? குஞ்சலா : மகனே! அந்த ரகசியம் எனக்கு நன்றாகத் தெரியும். வாரணாசியில் சுதிரா என்றொரு வைசியன் இருந்தான். மிகவும் நல்லவனும், நல்வழி நடப்பவனுமாகிய அவனுக்கு சித்ரா என்றொரு மனைவி இருந்தாள். அவள் மிகவும் தீயவள். யாருடனாவது தீய பேச்சுக்களைப் பேசிக் கொண்டிருப்பதும், சமயம் நேரும்போதெல்லாம் தன் கணவனை அவமானப்படுத்துவதும் அவள் பொழுது போக்காக இருந்தது. அவள் கொடுமை தாங்காது சுதிரா மற்றொரு பெண்ணை மணந்து கொண்டான். இது பொறுக்க மாட்டாமல் சித்ரா வீட்டை விட்டு ஒடிக் கொலை, கொள்ளை, களவு முதலியவற்றைச் செய்கின்ற கூட்டத்தாருடன் சேர்ந்து கொண்டாள். தானே தலைமை வகித்துப் பலரையும் கொன்று தீர்த்தாள். காலம் வந்த பொழுது அவள் இறந்துவிட அவள் ஆன்மா எமலோகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. பல தண்டனைகளை அனுபவித்த பிறகு பிளக்ஷத்தீவு மன்னனுடைய மகளாகப் பிறந்தாள். அவள் செய்த கொலைகள் காரணமாக இப்போது அவள் வாழ்க்கையை நாசப்படுத்த அவளுக்கு மணம் பேசப்பட்ட அத்தனை ராஜாக்களும் இறந்தார்கள்.