பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்ம புராணம் 59 உஞ்வலா: தந்தையே! எனக்கு ஒரு சந்தேகம். இத்துணை கொலைகள் செய்து நரகவேதனை அனுபவித்த இவள் ஒரு சாதாரணப் பிறப்பு எடுக்காமல் எப்படி பிளக்ஷத்தீவு மன்னனுக்கு மகளாகப் பிறக்க முடிந்தது? குஞ்சலா : மகனே! மிக அருமையான கேள்வியைக் கேட்டாய். இந்தக் கேள்வியை நான் உன்னிடம் எதிர் பார்த்தேன். அதற்கான காரணம் உனக்குச் சொல்வேன். இத்துணை கொலைகள் செய்து வாழ்க்கை நடத்தி யிருந்தாலும், ஒரு நாள் இவள் வீடு தேடி, உணவு கேட்டு ஒரு முனிவர் வந்தார். தன் தீய குணங்களை எல்லாம் மறந்து விட்டு அவரை வரவேற்று பாதபூஜை செய்து அவருக்கு உணவும் தந்தாள். அந்தப் புண்ணியம்தான் அரசன் மகளாகப் பிறக்கச் செய்தது. உஞ்வலா : தந்தையே! அந்தப் பெண்ணுக்குத் தன் பாவங்களிலிருந்து வெளியேறி நற்கதி அடைய வழி உண்டா என்பதைச் சொல்ல வேண்டுகிறேன். குஞ்சலா : உண்டு மகனே! அவள் எல்லாவற்றையும் துறந்து காட்டிற்குச் சென்று விஷ்ணுவைக் குறித்து கடுந்தவம் இயற்றினால் அவள் உய்கதி அடைய முடியும். அவளிடத்தில் அன்பு வைத்திருக்கும் நீ நாளை அங்கு செல்லும் பொழுது, அவளைக் கண்டு இதனைச் சொல்வாயாக. நிறம் மாறிய அன்னங்கள் ஆலமரத்தின் மேல் குடியிருந்த கிளிக் குடும்பத்தின் தலைவன் குஞ்சலா தன் இரண்டாவது பிள்ளையாகிய சமுஜ்வலாவிடம் பேசத் தொடங்கிற்று.