பக்கம்:பதினெண் புராணங்கள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 பதினெண் புராணங்கள் குஞ்சலா (தந்தை) : என் இரண்டாவது மகனே, சமுஜ்வலா! நீ எப் பக்கம் இரை தேடப் போகிறாய்? நீ ஏதாவது விசேஷத்தைக் கண்டாயா? சமுஜ்வலா (மகன்) : தந்தையே! வட திசையில் இமயத்தில் இருக்கும் மானசரோவர் என்ற ஏரிக்குத்தான் இரை தேடிச் செல்கிறேன். ஒருமுறை நான் அங்கு இருந்தபொழுது முழுவதும் கருநிறம் வாய்ந்த ஒரு பெரிய அன்னப் பறவையும், அதன் பின்னர் அதே கருநிறம் பொருந்திய பல அன்னங்களும் மானசரோவருக்குள் வந்தன. சற்று நேரத்தில் உடல் முழுவதும் வெள்ளையும், மூக்கும் காலும் கருப்பாக உள்ள சில அன்னங்கள் வந்து சேர்ந்தன. இந்தப் பறவைகள் எல்லாம் ஏரியில் நீந்தி விளையாடும் பொழுது மிகப் பெரிய ஒரு ராஜ அன்னமும், 2 துணை அன்னங்களும் மானசரோவர் உள்ளே யிருந்து புறப்பட்டு வெளியே பறந்து சென்று விட்டன. சற்று நேரத்தில் பேய் வடிவுடைய 4 பெண் பூதங்கள் மானசரோவர் கரைக்கு வந்து மிகப் பெரிய குரலுடன் ஒலமிட்டுக் கொண்டே இருந்தன. இதைப் பார்த்த எனக்குத் தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. இதுபற்றிய விளக்கங்கள் ஏதேனும் தரமுடியுமா? r குஞ்சலா (தந்தை) : மகனே! இதன் ரகசியத்தை நான் அறிவேன். இதோ உனக்குச் சொல்லுகிறேன். ஒருமுறை நாரதர் இந்திரலோகம் சென்றார். இந்திரன் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்று, நீண்ட நாட்களாக உங்களைக் காணவில்லையே, எங்கு சென்றிருந்தீர்கள்?’ என்று கேட்டான். நாரதர், தீர்த்த யாத்திரை சென்றிருந்தேன்’ என்றார். உடனே இந்திரன், 'ரொம்ப நல்லது. எல்லாத் தீர்த்தங்களையும் பார்த்த தாங்கள் அவற்றுள் மிக உயர்ந்தது எது என்று சொல்ல முடியுமா? என்று கேட்க, அனைத்தும் உயர்ந்ததுதான். ஒன்றைக்